இட்லி அரிசியில் சுவையான முறுக்கு இப்படியும் செய்து பாருங்கள்..!

Advertisement

முறுக்கு செய்வது எப்படி.?

வணக்கம் நண்பர்களே..! பண்டிகை காலம் நெருங்கி கொண்டு இருப்பதால் வித விதமான பலகாரங்கள் தினமும் செய்கின்றனர். அந்த பலகாரத்தில் முறுக்கு முக்கியமான ஒன்று. அரிசி முறுக்கு, கை முறுக்கு, சுருள் முறுக்கு, கார முறுக்கு, வெள்ளை முறுக்கு, பொட்டுக்கடலை முறுக்கு இதுபோன்ற முறுக்கு வகைகள் சாப்பிட்டு அலுத்துபோகிறுக்கும். அவர்களுக்கு இந்த பதிவு கொஞ்சம் புதிய வகையான பதிவாக இருக்கும். இட்லி அரிசியில் சுவையான முறுக்கு செய்வது எப்படி என்று இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துகொண்டு பயன்பெறுங்கள்.

இட்லி அரிசியில் முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்:

  • இட்லி அரிசி- 1 டம்ளர் 
  • காய்ந்த மிளகாய்- 5
  • பொட்டுக்கடலை- 1/4 கப் 
  • பெருங்காயத்தூள்- 1/4 தேக்கரண்டி 
  • எள்ளு- 1/4 தேக்கரண்டி
  • தேங்காய் எண்ணெய்- 2 தேக்கரண்டி  
  • எண்ணெய்- தேவையான அளவு 
  • உப்பு- தேவையான அளவு 

இட்லி அரிசி முறுக்கு செய்முறை விளக்கம்:

ஸ்டேப்- 1

முதலில் எடுத்து வைத்துள்ள இட்லி அரிசியை நன்றாக அலசி தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள். அதன் பிறகு காய்ந்த மிளகாயையும் தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். இந்த இரண்டு பொருட்களும் 3 மணி நேரம் நன்றாக ஊற வேண்டும்.

ஸ்டேப்- 2 

அடுத்ததாக அந்த 2 பொருட்களும் ஊறிய பிறகு ஒரு மிக்சி ஜாரில் முதலில் ஊறிய மிளகாயை பொட்டு அரைத்து விடுங்கள். மிளகாய் அரை பட்டவுடன் அரிசியில் தண்ணீர் இல்லாமல் சுத்தமாக வடிகட்டி அதே ஜாரில் பொட்டு அரைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 3

இந்த மாவை கெட்டியாக மிகவும் நைசாக அரைத்து கொள்ளுங்கள். மிக்சியில் அரைப்பதால் மாவு கொஞ்சம் சூடாக இருக்கும். அதனால் மாவை அரைத்த உடன் ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற விடுங்கள். அப்போது தான் முறுக்கு மாவு பக்குவம் மாறாமல் இருக்கும்.

ஸ்டேப்- 4

அதன் பிறகு பொட்டுக்கடலையை அதே மிக்சி ஜாரில் பொட்டு நைசாக அரைத்து கொள்ளுங்கள். அரைப்பட்ட பொட்டுக்கடலை மாவை அரைத்து வைத்து இருக்கும் அரிசி மாவுடன் கொட்டி விடுங்கள்.  அதனுடன் எடுத்து வைத்துள்ள எள்ளு மற்றும் சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து விடுங்கள்.

ஸ்டேப்- 5

மாவு பிசைந்து முடிக்கும் போது கடைசியில் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை நன்றாக அடுப்பில் வைத்து காய்ச்சி அந்த எண்ணெயை இந்த மாவில் ஊற்றிவிடுங்கள். எண்ணைய் கொஞ்சம் ஆறிய பிறகு மீண்டும் மாவை உங்கள் கைகளால் நன்றாக பிசைந்து விடுங்கள். இப்போது முறுக்கு மாவு தயார் ஆகிவிடும்.

ஸ்டேப்- 6

கடைசியாக அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்த பிறகு தயார் செய்து முறுக்கு மாவில் எப்போதும் போல முறுக்கு செய்து எண்ணெயில் பொட்டு எடுத்து விடுங்கள். இது மாதிரி செய்த முறுக்கு 15 நாட்கள் ஆனாலும் வீணாகாமல் அப்படியே இருக்கும்.

இதையும் படியுங்கள்⇒ தீபாவளிக்கு இந்த சாமை அரிசி முறுக்கை செய்து                                                                                 பாருங்கள் 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal kurippu tamil
Advertisement