தினமும் சட்னி அரைக்க வேண்டும் ! இந்த ஒரு பவுடர் இருந்தால் போதும்

chutney powder recipe in tamil

சட்னி ரெசிபி

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில்  இன்ஸ்டன்ட் சட்னி செய்வதை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். அதாவது வீட்டில் தினமும் என்ன சட்னி செய்வது என்று குழப்பமாகவே இருக்கும். அதுவும் வேலைக்கு செல்லும் பெண்கள் வீடிற்கு வரும் பொழுது சட்னி செய்வதற்கு அலுப்பாக இருக்கும். அந்த வகையில் மிகவும் எளிதாக சட்னி பவுடர் எப்படி செய்வது என்று தான் தெரிந்துகொள்ள போகிறோம். இது பலருக்கும் உதவியாக இருக்கும், விடுதியில் தங்கி படிப்பவர்களுக்கும், வெளியூர் செல்பவர்களுக்கும் இந்த இன்ஸ்டன் சட்னி மிகவும் உதவியாக இருக்கும். இது ஒரு மாதம் வரைக்கும் கெட்டு போகாமல் இருக்கும். மேலும் இதை எப்படி எளிமையாக செய்வது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

ஒரே சட்னி செய்யாமல் இந்த சட்னி செய்து பாருங்க..! சுவை சும்மா அள்ளும்’

 

சட்னிக்கு தேவையான பொருட்கள்:

  • வேர்க்கடலை –  அரை கப் 
  • பொட்டுக்கடலை -1 கப் 
  • வெள்ளை உளுந்து (அல்லது ) கருப்பு உளுந்து – அரை கப் 
  • வரமிளகாய் – தேவையான அளவு
  • உப்பு
  • தேங்காய் துருவல் -அரை கப் 
  • பூண்டு -6 பல் 
  • கருவேப்பிலை – 1 கொத்து 

சட்னி பவுடர் செய்முறை:

ஸ்டேப்:1

முதலில் ஒரு கடாயை எடுத்துகொண்டு மிதமான சூட்டில் அடுப்பில் வைக்கவும். அதன் பிறகு கடாய் சூடானதும் வேர்க்கடலையை கடாயில் சேர்த்து கருகாத அளவிற்கு வதக்கவும், வறுத்த கடலை இருந்தால் வதக்க தேவையில்லை. அதன் பிறகு வறுப்பட்ட பிறகு அதை ஒரு தட்டில் தனியாக வைக்கவும், வேர்க்கடலையை தோலை நீக்கி விட்டு சட்னியில் சேர்ப்பது நல்லது. ஏனென்றால் தோலில் துவர்ப்புகள் அதிகமாக இருக்கும்.

ஸ்டேப்:2

அடுத்ததாக அதே கடையில் பொட்டுக் கடலையை சூடாகும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும். பொட்டுக்கடலை வறுபட்டு வந்ததும் அதை தட்டில் மாற்றிக்கொள்ளவேண்டும்.

ஸ்டேப்:3

அதன் பிறகு உளுந்தம் பருப்பை கோல்டன் கலரில் வரும் அளவிற்கு வறுத்து கொள்ளவேண்டும். கருகிவிடாமல் வறுத்து கொள்ளுங்கள். அதன் பிறகு அதையும் அதே தட்டில் மாற்றிக்கொள்ளவேண்டும்.

ஸ்டேப்:4

அடுத்ததாக கடாயில் காரத்திற்கு தகுந்தது போல் வரமிளகையை எண்ணெய் சேர்க்காமல் அதே சூட்டில் கருகாமல் வறுத்து கொள்ளவேண்டும். அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டையும் வறுத்து கொள்ளவேண்டும். வறுத்த மிளகாவை தட்டில் மாற்றிக்கொள்ளவேண்டும்.

ஸ்டேப்:5

அடுத்ததாக துருவி வைத்த தேங்காவை அதே கடையில் ஈரதன்மை போகும் வரை வதக்க வேண்டும். அதன் பிறகு அதில் கருவேப்பிலை, பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அடுத்ததாக நன்றக வறுத்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு அந்த கடாயையில் வறுத்த தேங்காவை பரப்பி விடவேண்டும்.

ஸ்டேப்:6

கடைசியாக வறுத்து வைத்த வேர்க்கடலை,பொட்டுக்கடலை, உளுந்து, பூண்டு,கருவேப்பிலை, தேங்காய், வரமிளகாய் போன்றவற்றை ஒரு மிக்ஸிஜாரில்  போட்டு அரைத்துக்கொள்ள வேண்டும். ஜாரில் ஈரப்பதம் இல்லாமல் இருக்க வேண்டும். உங்களுக்கு எப்படி சாப்பிட்டால் பிடிக்குமோ அந்த அளவிற்கு மெலிதாக அல்லது  கொரகொரப்பாக  பவுடரை அரைத்துக்கொள்ள வேண்டும்.

சட்னி பவுடர் ஆரிய பிறகு, கண்ணாடி பாட்டில் அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் அந்த பவுடரை எடுத்தது வைத்து கொண்டு. சாப்பிடும் பொழுது தேவையான அளவு அந்த பவுடரை எடுத்துக்கொண்டு அதில் தண்ணீர் சேர்த்து அல்லது கடுகு போட்டு தாலித்தோ சாப்பிடலாம்.

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal