Iyer Veetu Pulao Recipe in Tamil | Vegetable Pulao Recipe in Tamil
ஐயர் வீட்டு சாப்பாடு என்றாலே தனி சுவை. ஐயர் வீட்டு சாப்பாட்டை பிடிக்காது என்று சொல்பவர்களே கிடையாது என்றே சொல்லலாம். அவ்வளவு சுவையாக இருக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் ஐயர் வீட்டு புலாவ் சாதம் எப்படி செய்வது என்பதை தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். புலாவ் என்றாலே நாக்கில் எச்சில் ஊறும். அதிலும் ஐயர் வீட்டு புலாவ் என்றால் சொல்லவா வேண்டும். ஓகே வாருங்கள் நண்பர்களே வீடே மணக்கும் அளவிற்கு ஐயர் வீட்டு புலாவ் எப்படி செய்வது என்று இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
How to Make Veg Pulao Recipe in Tamil | வெஜ் புலாவ் செய்வது எப்படி.?
ஐயர் வீட்டு புலாவ் செய்ய தேவையான பொருட்கள்:
- அரிசி- 1 1/2 கப்
- தேங்காய்- 1/2 கப்
- புதினா இலை- சிறிதளவு
- பச்சை மிளகாய்- 2
- இஞ்சி- 2 சிறியதுண்டு
- பட்டை- 2 துண்டு
- கிராம்பு- 6
- ஏலக்காய்- 1
- மிளகு- 10
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
- பச்சை பட்டாணி- 1/4 கப்
- பீன்ஸ்- 1/4 கப்
- கேரட்- 1/4 கப்
- தக்காளி- 1
- முந்திரி- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
சுவையான பன்னீர் புலாவ் செய்வது எப்படி? |
தாளிப்பிற்கு தேவையான பொருட்கள்:
- நெய்- 1 ஸ்பூன்
- எண்ணெய்- 1 ஸ்பூன்
- சீரகம்- 1/2 ஸ்பூன்
- பிரியாணி இலை- 2
- பட்டை- 1 (சிறியதுண்டு)
- கிராம்பு- 5
ஐயர் வீட்டு சுவையில் புலாவ் செய்வது எப்படி..?
ஸ்டேப் -1
முதலில் அரிசியை நன்றாக கழுவி தண்ணீரை வடிகட்டி விட்டு எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -2
பிறகு ஒரு மிக்ஸி ஜாரினை எடுத்து கொள்ளுங்கள். அதில் தேங்காய், புதினா இலை, பச்சை மிளகாய், இஞ்சி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -3
இப்போது, அடுப்பில் குக்கரை வைத்து குக்கர் சூடானதும் அதில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -4
எண்ணெய் சூடானதும், அதில் சீரகம், பிரியாணி இலை, பட்டை மற்றும் கிராம்பை சேர்க்கவும். இவை பொன்னிறமாக சிவந்ததும் தயார் செய்து வைத்துள்ள புலாவ் பேஸ்டினை இதனுடன் சேர்த்து 2 நிமிடம் கிளறி விடுங்கள்.
ஸ்டேப் -5
பிறகு, இதில் பச்சை பட்டாணி, நறுக்கிய தக்காளி, முந்திரி, மஞ்சள் தூள் மற்றும் நீட்ட வாக்கில் நறுக்கி வைத்துள்ள கேரட், பீன்ஸ் ஆகியவற்றை சேர்த்து 3 நிமிடங்கள் நன்றாக வதக்குங்கள்.
சிக்கன் புலாவ் சுவையான சமையல் செய்முறை..! |
ஸ்டேப் -6
இவை நன்றாக வதங்கிய பிறகு, 1 1/2 கப் அரிசியிற்கு 3 கப் தண்ணீர் சேர்த்து மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.
ஸ்டேப் -7
இப்போது, இவை கொதிக்க தொடங்கியதும் கழுவி வைத்த அரிசியை சேர்த்து கலந்து விடுங்கள். பிறகு இதில் எலுமிச்சை சாறு சேர்த்து குக்கரை மூடி வைத்து விடுங்கள்.
ஸ்டேப் -8
குக்கர் 3 விசில் வந்ததும், சிறிது நேரம் கழித்து இறக்கினால் ஐயர் வீட்டு சுவையில் வெஜ் புலாவ் ரெடி.!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |