ஐயர் வீட்டு தக்காளி தொக்கு செய்வது எப்படி.?
தக்காளி தொக்கு என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடித்த உணவாக இருக்கிறது. இந்த தக்காளி தொக்கை வைத்து எந்த உணவுக்கு வேண்டுமானாலும் சாப்பிடலாம். அந்த அளவுக்கு இதனுடைய ருசி இருக்கும். நாம் எப்பொழுதும் சாப்பிடும் உணவின் அளவை விட தக்காளி தொக்கு இருந்தால் கொஞ்சம் அதிகமாக சாப்பிடுவோம். அதுமட்டுமில்லாமல் ஐயர் வீட்டில் உணவுகள் தனி ருசியாக இருக்கும். அப்படி என்ன தான் செய்கிறார்கள் உணவில் என்று பலரும் யோசிப்பார்கள். அவர்களுக்கு பதில் சொல்லும் பதிவாக இந்த பதிவில் ஐயர் வீட்டு தக்காளி தொக்கு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
தக்காளி தொக்கு செய்ய தேவையான பொருட்கள்:
- வெங்காயம் –1
- தக்காளி –1
- பூண்டு –10 பற்கள்
- நல்லெண்ணெய் – 4 தேக்கரண்டி
- உளுத்தப்பருப்பு- 1 தேக்கரண்டி
- பெருங்காயத்தூள் –1/4 தேக்கரண்டி
- மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1 1/2 தேக்கரண்டி
- உப்பு- தேவையான அளவு
ஐயர் வீட்டு தக்காளி குழம்பு செய்யலாம் வாங்க..
தக்காளி தொக்கு செய்முறை:
அடுப்பில் கடாய் வைத்து 4 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றவும், அதில் 1 தேக்கரண்டி உளுத்தப்பருப்பு, 10 பற்கள் பூண்டு, நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
பிறகு 1/4 தேக்கரண்டி பெருங்காய தூள், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள், கருவேப்பிலை ஒரு கைப்பிடி சேர்த்து வதக்கவும்.
இந்த அதில் நறுக்கி வைத்த தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். தேவையான அளவு சேர்த்து வதக்க வேண்டும். சேர்த்த வெங்காயம், தக்காளி சுருங்கி, எண்ணெய் பிரிந்த நிலை வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். அவ்ளோ தாங்க ஐயர் வீட்டு தக்காளி தொக்கு ரெடி.! ஒரு முறை செய்து பாருங்க..
ஐயர் வீட்டு வத்த குழம்பு செய்வது எப்படி.?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |