சுவையான ஜவ்வரிசி கேசரி செய்வது எப்படி…?

javvarisi kesari recipe in tamil

ஜவ்வரிசி கேசரி

அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பர்களே…!. சொல்லும்போதே நாவிற்கு சுவை தரக்கூடிய ஜவ்வரிசி கேசரி செய்வது எப்படி என்று இன்றைய பொதுநலம். காம்  பதிவில் தெரிந்துகொள்ளாலாம் வாங்க..!. ரவை கேசரி, சேமியா கேசரி, பால் கேசரி  இதுபோல ஒரே கேசரி சாப்பிட்டு அலுத்துபோயிருக்கும்.  அவர்களுக்கு இன்றைய பதிவு மிகவும் உதவியானதாக இருக்கும். வீட்டில் இனிப்பு செய்ய வேண்டுமென்றால் ஜவ்வரிசி கேசரி செய்துகொடுங்கள். ஒரு தடவை சாப்பிட்டால் போதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். எனவே இந்த ஜவ்வரிசி கேசரியை எப்படி செய்வது என்று தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளலாம்.

புதுமையான பழகேசரி செய்து சாப்பிடுங்கள்

 

ஜவ்வரிசி கேசரி செய்ய  தேவையான பொருட்கள்: 

 • ஜவ்வரிசி – 1 கப்
 • சர்க்கரை-  1 கப் 
 • ஏலக்காய்த்தூள்- 1/4 தேக்கரண்டி 
 • குங்குமப்பூ- 1 சிட்டிகை 
 • முந்திரி – 10
 • உப்பு – தேவையான அளவு
 • நெய் – தேவையான அளவு 

ஜவ்வரிசி செய்முறை விளக்கம்:

ஸ்டேப்-1

 • ஒரு கப் ஜவ்வரிசியை நன்றாக அலசி அதில் தண்ணீர் சேர்த்து ஊறவைக்க
  வேண்டும். 1 மணிநேரம் ஊறிய பிறகு ஜவ்வரிசியை தண்ணீர் இல்லாமல்
  சுத்தமாக வடிகட்ட வேண்டும்.

ஸ்டேப்-2

 • அதன் பிறகு சர்க்கரை 1 கப் எடுத்துக்கொண்டு மிக்சி ஜாரில் நல்ல பவுடராக
  அரைத்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள். சிறிய கிண்ணத்தில் ஒரு இன்ச் அளவு குங்குமப்பூ எடுத்துக்கொண்டு அதில் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -3

 • அடுத்ததாக அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி நெய்
  ஊற்றி அதில் முந்திரியை பொன் நிறமாக வறுத்து தனியாக வைக்கவேண்டும். அதே பாத்திரத்தில் வடிகட்டி வைத்துள்ள ஜவ்வரிசியை போட்டு நன்றாக கலந்துவிடுங்கள்.

ஸ்டேப்-4

 • கலந்த பிறகு 1/2 கப் அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் மிதமான சூட்டில் ஜவ்வரிசியை வேகவைக்க வேண்டும்.

ஸ்டேப்-5

 • ஜவ்வரிசி வெந்த பிறகு அரைத்து வைத்துள்ள சர்க்கரையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளற வேண்டும். அதனுடன் நெய் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்க்க வேண்டும்.

ஸ்டேப்-6

 • கடைசியாக தண்ணீரில் கலந்து வைத்துள்ள குங்குமப்பூவை ஜவ்வரிசி கேசரி
  மேல் ஊற்றி கிளறி இறக்கி விடுங்கள். அடுப்பிலிருந்து கேசரியை இருக்கும்
  முன்பு வறுத்து வைத்துள்ள முந்திரியை அதன் மேல் தூவி இறக்கிவிட
  வேண்டும். அவ்வளவு தான் சுவையான  ஜவ்வரிசி கேசரி ரெடி.

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal