கோவில்பட்டி கடலை மிட்டாய் செய்வது எப்படி? | Kadalai Urundai Seivathu Eppadi

Advertisement

கடலை மிட்டாய் செய்வது எப்படி? | Kadalai Mittai Seivathu Eppadi

நண்பர்களுக்கு வணக்கம் இன்றைய சமையல் குறிப்பு பகுதியில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கடலை மிட்டாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம். அப்போது உள்ள குழந்தைகள் முதல் இப்போது உள்ள குழந்தைகள் வரை எல்லோருக்கும் பிடித்த ஒரு இனிப்பு பொருள் கடலை மிட்டாய். இதை எல்லோரும் கடையில் வாங்கி தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் இனி நீங்கள் கடையில் வாங்கி சாப்பிட வேண்டாம், ஈசியாக எப்படி வீட்டிலேயே மிகவும் ருசியாக செய்யலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

Kadalai Urundai Seivathu Eppadi

  • வேர்க்கடலை – அரை கிலோ
  • தண்ணீர் – 100 ml
  • வெல்லம் – 200 கிராம்

 செய்முறை:

ஸ்டேப்: 1

  • Kadalai Mittai Seivathu Eppadi: முதலில் அரை கிலோ வேர்க்கடலையை உப்பு சேர்க்காமல் வறுத்து கொள்ளவும். பின்னர் வறுத்து வைத்த வேர்க்கடலையை மிக்சியில் போட்டு ஒன்று இரண்டாக அரைத்து கொள்ளவும்.

ஸ்டேப்: 2

  • கடலை மிட்டாய் செய்வது எப்படி? பின்னர் ஒரு கடாயில் 100 ML தண்ணீர் ஊற்றி அதில் 200 கிராம் வெல்லம் சேர்த்து பாகு ஆகும் வரை மீடியம் flame-ல் வைத்து கொதிக்க வைக்கவும்.
  • வெல்லம் பாகு ஆகிவிட்டதா என்பதை தெரிந்துகொள்ள ஒரு பௌலில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு துளி பாகை விடவும். பாகு உருண்டை வடிவில் தண்ணீரில் மிதந்தால் பாகு தயாராகிவிட்டது என்று அர்த்தம்.

ஸ்டேப்: 3

  • Kadalai Urundai Seivathu Eppadi? பாகு தயாரானதும் அரைத்து வைத்திருக்கும் வேர்க்கடலையை சேர்த்து நன்றாக கிண்டவும். பின்னர் இதை வேறொரு பாத்திரத்தில் மற்றி கொள்ளவும்.

ஸ்டேப்: 4

  • Kadalai Urundai Seimurai: பின்னர் இரண்டு கைகளிலும் நெய் தடவி எந்த வடிவில் வேண்டுமோ அந்த வடிவில் கடலை மிட்டாயை உருட்டி கொள்ளவும். உருட்டி வைத்ததும் ஒரு அரை மணி நேரம் காயவைக்கவும். அவ்வளவு தான் சுவையான கடலை மிட்டாய் தயார்.
இட்லி மாவில் சுவையான தேன் மிட்டாய் செய்வது எப்படி?

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement