யாரெல்லாம் புரட்டாசி வாங்க சைவ 65 சாப்பிடுவோம்..!

Advertisement

காளான் 65 செய்வது எப்படி?

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அனைவருமே புரட்டாசியாக தான் இருப்பீர்கள். அப்படி புரட்டாசி மாதம் விரதம் எடுப்பவர்கள் பக்தியுடன் இருப்பார்கள் இருந்தாலும் அவர்களின் மனசானது லேசாக அலைபாயும். அது எப்படி என்றால் சிக்கன் மட்டன் போன்றவற்றை பார்க்கும் போது அவர்களையும் மீறி ஒரு ஆசை தூண்டும் இருந்தாலும் புரட்டாசி விரதம் என்று சொல்லி அதனை தவிர்ப்பார்கள் வாங்க இனி அதனை பற்றி கவலை கொள்ளவேண்டாம். வாங்க இப்போது காளான் 65 செய்வது எப்படி என்று..?

காளான் 65 செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

  • காளான் – 200 கிராம்
  • அரிசி மாவு – 100 கிராம்
  • சோள மாவு – 25 கிராம்
  • தனியா பொடி – 2 தேக்கரண்டி
  • கரம் மசாலா பொடி – 2 தேக்கரண்டி
  • மிளகாய் பொடி – 2 தேக்கரண்டி
  • இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  • மஞ்சள் – தேவையான அளவு
  • சீரக தூள் – 1/4 தேக்கரண்டி
  • மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
  • தயிர் – 100 கிராம்
  • உப்பு – தேவைக்கேற்றப
  • எண்ணெய் – தேவையான அளவு.

ஸ்டேப் -1

முதலில் காளானை நன்கு கழுவி சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப் -2

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, சோள மாவு, தனியா பொடி, கரம் மசாலா பொடி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, மிளகு தூள், சீரக தூள், தேவையான அளவு உப்பு என அனைத்து மசாலா பொருட்களை சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

சுவைக்காக சிறிது, புளி அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து அகலந்துகொள்ளவும்.

ஸ்டேப் – 3

அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, தயிர் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். பின்பு தனியாக நறுக்கி வைத்த காளானை ஒவ்வொன்றாக அதனுடன் கலந்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.

ஸ்டேப் – 4

காளான் கெட்டியாக மாறிய பின் ஒரு கடாயில் எண்ணெய்யை ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் கலந்து வைத்துள்ள 65-ஐ அதில் ஒவ்வொன்றாக போட்டு எடுக்கவும். சுவை வேற மாறி இருக்கும்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement