கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி
கத்தரிக்காய் பலருக்கும் பிடிக்காத ஒன்று. இதை குழம்பில் சேர்த்தாலும் சரி, வருத்தாலும் சரி சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு இந்த பதிவில் கூறியுள்ளது போல் சட்னி சேர்த்து கொடுங்கள். வேண்டாம் என்றே சொல்ல மாட்டார்கள். என்னது கத்திரிக்காயில் சட்நீயா என்று ஆச்சிரியமடையாதீர்கள். ஒரு முறை செய்து பாருங்க அனைவருக்கும் இந்த கத்தரிக்காய் சட்னி மிகவும் பிடிக்கும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
கத்தரிக்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
- கத்தரிக்காய் – 1/4 கிலோ
- வெங்காயம் – 7
- தக்காளி -3
- காய்ந்த மிளகாய்- 5
- பச்சை மிளகாய்-3
- திருகிய தேங்காய்- 1/4 கப்
- உப்பு – தேவையான அளவு
- கொத்தம்மல்லி – தேவையான அளவு
- புளி -சிறிதளவு
இட்லி, தோசைக்கு இந்த சட்னி செய்து பாருங்க.!
கத்தரிக்காய் சட்னி செய்முறை:
அடுப்பில் கடாய் வைத்து எண்ணைய் 3 தேக்கரண்டி ஊற்றி அதில் கடுகு சேர்க்கவும்,பின் அதில் உளுத்தப்பருப்பு 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் 4, பச்சை மிளகாய், நறுக்கி வைத்த வெங்காயம், நறுக்கி வைத்த கத்தரிக்காய் சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் தக்காளி, திருகி வைத்த தேங்காய் பூ சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி மற்றும் கத்தரிக்காய் சுருங்கிய பதம் வரும் வரை வதக்கவும்.
சுருங்கிய பதம் வந்ததும் அடுப்பை அணைத்து ஆற விடவும். பிறகு இதனை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும்.
பிறகு தாளிப்பதற்கு அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்ற கடுகு சேர்த்து கொள்ளவும். கடுகு பொரிந்ததும் கருவேப்பிலை சேர்த்து, அரைத்து வைத்த சட்னியையும் சேர்த்து கலந்து விடவும். அவ்ளோ தாங்க சுவையான கத்தரிக்காய் சட்னிரெடி.!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |