கத்திரிக்காய் கிரேவி இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்..!

Advertisement

கத்திரிக்காய் கிரேவி

வணக்கம் நேயர்களே..!இன்று நாம் பார்க்கப்போகும் ரெசிபி சைவ பிரியர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த கத்திரிக்காவை வைத்துதான் பார்க்கப்போகிறோம். நாம் இன்றுவரை கத்திரக்காவில் குழம்பு, எண்ணெய் கத்திரிக்காய் போன்றவை தான் செய்து சாப்பிட்டுருப்போம். ஆனால் இன்று பார்க்கப்போகும் ரெசிபியை ஒருமுறை செய்து பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். அது என்னடா கத்திரிக்காய் கிரேவி என்றுதானே யோசிக்கிறீர்கள்..!

இன்றை பதிவை படித்தால் உங்களுக்கே தெரியும் சரி வாங்க கத்திரிக்காய் கிரேவி செய்வோம்..!

தேவையான பொருட்கள்:

முதலில் கத்திரிக்காய் கிரேவி செய்வதற்கு தேவையான பொருட்களை பார்போம்.

  • கத்திரிக்காய் – 1/2 கிலோ (பிஞ்சாக இருந்தால் நன்று )
  • தக்காளி – 2 பெரியது
  • வெங்காயம் – 3 பெரியது
  •  சோம்பு (பெருஞ்சீரகம் ) – 2 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
  • மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
  • மிளகு – 1/4 டீஸ்பூன்
  • சீரகம்(சிறுசீரகம் ) – 1/4 டீஸ்பூன்
  • தேங்காய்த்துருவல்  – 1/2 கப்
  • வேர்க்கடலை – 1/4 கப்
  • எண்ணெய் – 4 டீஸ்பூன்
  • கருவேப்பிலை – தேவையான அளவு
  • கொத்தமல்லி இலை – நறுக்கியது
  • உப்பு – தேவையான அளவு 

 கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?

ஸ்டேப்- 1

kathirikai gravy recipe in tamil

முதலில் நாம் எடுத்து வைத்திருக்கும் கத்திரிக்காயை நன்றாக கழுவி சுத்தப்படுத்தி விட்டு அதனுடைய காம்பை நறுக்கிவிட்டு நான்காக அதாவது மேல்கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளதை போல் நறுக்கி வைக்கவும்  பிறகு நாம் எடுத்துவைத்திருந்த 2 தக்காளி, 3 வெங்காயம் இவைகளையும் நான்கு துண்டுகளாக நறுக்கி அதை ஒரு மிக்சிஜாரில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்-2

பிறகு அடுப்பை பற்றவைத்து அதில் ஒரு கடாயை வைத்து அதில் 4 டீஸ்பூன் எண்ணெய்யை ஊற்றி  2 டீஸ்பூன் சோம்பு மற்றும் கருவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்கவும். இதனுடன் நாம் நறுக்கிவைத்திருக்கும் கத்திரிக்காயை சேர்த்து நன்றாக வதக்கவும். கத்திரிக்காய் நன்றாக வதங்குவதற்கு அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்குங்கள்.

ஸ்டேப்- 3

பின்பு கத்திரிக்காய் நன்றாக வதங்கியதும் இதனுடன் நாம் அரைத்து வைத்திருத்த தக்காளி,வெங்கயாம் விழுதை சேர்த்து வதங்கவிடவும். இதனுடன் 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்,1 டீஸ்பூன் மல்லித்தூள்,1 டீஸ்பூன் மஞ்சள்தூள்,உப்பு தேவையான அளவு இவையெல்லாம் சேர்த்து நன்கு கலந்துவிடவும். மேலும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும்.

ஸ்டேப்- 4

பிறகு ஒரு மிக்சி ஜாரில் நாம் எடுத்திருக்கும் 1/2 கப் தேங்காய்த்துருவலை சேர்த்து அதனுடன் 1/4 கப் வேர்க்கடலை, 1/4 டீஸ்பூன் மிளகு ,1/4 டீஸ்பூன் சீரகம்  இவையெல்லாம் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்- 5

இப்போது கத்திரிக்காய் வெந்துவிட்டதா என்று பார்த்துவிட்டு நாம் அரைத்த தேங்காய் விழுதை இதனுடன் சேர்த்து நன்கு கலந்துவிடவும். மேலும் கடைசியாக நாம் நறுக்கி வைத்திருந்த கொத்தமல்லி இலையை சேர்த்து இறக்கிவிடவும்.
(குறிப்பு: பொதுவாக எந்த ஒரு குழம்போ, பொறியாலோ, கிரேவியோ இவற்றில் உள்ள காய்கள் வெந்துவிட்டதா என்று பார்த்துவிட்ட பிறகே தேங்காய்  சேர்க்கவேண்டும்)
மிகவும் சுவையான கத்திரிக்காய் கிரேவி ரெடி வாங்க சுவைக்கலாம்..! நீங்களும் இந்த கத்திரிக்காய் கிரேவியை செய்து பாருங்கள்.

இதையும் பாருங்கள் => உங்கள் வீட்டில் ரேஷன் அரிசி இருக்க அப்போ இந்த மாதிரி அல்வா செய்து பாருங்கள்..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal

 

Advertisement