கீரையில் பிரியாணி செய்து சாப்பிட்டிருக்கீங்களா.. இல்லையா அப்படியென்றால் இது மாதிரி செய்து கொடுங்கள்..!

Advertisement

கீரை பிரியாணி செய்முறை | Keerai Biryani Recipe in Tamil 

கீரையில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் வீட்டில் சமைப்பார்கள், இருப்பினும் வீட்டில் இருக்கும் அனைவருக்கும்  கீரை பிடிக்குமா என்று கேட்டால் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் என்று சொல்லிவிட முடியாது. சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது. அதிலும் பெரும்பாலான குழந்தைகள் கீரையை விரும்பி சாப்பிடுவது இல்லை. ஆக அனைவரும் விரும்பி சாப்பிடாத  கீரையை பயன்படுத்தி பிரியாணி செய்து  வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுங்கள் கண்டிப்பாக எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள்..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  1. அரிசி – ஒரு கப்
  2. வெந்தயக்கீரை – ஒரு கப்
  3. வெங்காயம் – 2
  4. தக்காளி – 1
  5. உருளைக்கிழங்கு – 2
  6. பச்சை மிளகாய் – 3
  7. பிரிஞ்சி இலை – 1
  8. இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
  9. நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்க வீட்ல கேரட் இருக்கா..? அப்போ கண்டிப்பா இந்த ரெசிபி செஞ்சி பாருங்க..!

கீரை பிரியாணி செய்முறை:கீரை பிரியாணி

ஸ்டேப்: 1

வெங்காயத்தை நீளமாக மற்றும் நைசாக கட் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 2

ஒரு தக்காளி பழத்தை நைசாக கட் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 3

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 4

வெந்தய கீரையை சுத்தமாக அலசி பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.

ஸ்டேப்: 5

அரிசியை சுத்தமாக கழுவி விட்டு 10 நிமிடம் ஊறவைக்கவும்.

ஸ்டேப்: 6 

அடுப்பில் குக்கரை வைத்து அதில் எண்ணெயை ஊற்றவும், எண்ணெய் சூடானதும் பிரிஞ்சி இலையை சேர்த்து தாளிக்கவும்.

ஸ்டேப்: 7

பின் பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிவைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும்.  வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

ஸ்டேப்: 8

இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாசனை போன பிறகு தக்காளியை சேர்த்து வதக்கவும்.

ஸ்டேப்: 9 

அதனை தொடர்ந்து வெந்தயக்கீரையை சேர்த்து வதக்கவும், பின் அதனுடன் உருளைக்கிழங்கைச் சேர்த்து மேலும் வதக்கி, உப்பு சேர்க்கவும்.

ஸ்டேப்: 10

பின் அதனுடன் அரிசியை சேர்த்துக் கிளறி, தேவையான அளவு தண்ணீர் விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். அவ்வளவு தான் சூப்பரான மற்றும் சுவையான கீரை பிரியாணி ரெடி. இந்த பிரியாணி செய்ய உங்களுக்கு பிடித்த கீரையையும் பயன்படுத்தலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பக்கத்து தெரு வரைக்கும் மணக்கும் ஐயர் வீட்டு பருப்பு சாதம் செய்முறை..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement