டேஸ்டான கீரை வடை செய்வது எப்படி | Keerai Vadai Recipe in Tamil

Keerai Vadai Recipe

கீரை வடை செய்வது எப்படி | How to Make Keerai Vadai in Tamil

Keerai Vadai Recipe: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம்-ல் சுவையான மாலை நேரத்தில் சாப்பிடக்கூடிய கீரை வடை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுவோம்..! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றுதான் வடை. அதிலும் உடலுக்கு சத்து தரக்கூடிய கீரை வடையை எப்படி சுலபமான முறையில் செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுவோம் வாங்க..!

இந்த Secret Recipe சேர்த்தால் போதும் மொறு மொறுன்னு உளுந்து வடை செய்யலாம்.!

கீரை வடை செய்ய – தேவையான பொருள்:

  1. உளுந்து – 1 கப் 
  2. பச்சை மிளகாய் – 3
  3. இஞ்சி – சிறிய துண்டு 
  4. அரைக்கீரை – 2 கப் (பொடியாக நறுக்கியது)
  5. பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
  6. உப்பு – தேவையான அளவிற்கு 
  7. மிளகு – 1/2 டீஸ்பூன் 
  8. சோம்பு – 1/2 டீஸ்பூன் (தேவைப்பட்டால்)
  9. எண்ணெய் 

கீரை வடை செய்வது எப்படி?

Keerai Vadai Recipe

 

ஸ்டேப் 1:

கீரை வடை செய்வதற்கு 1 கப் அளவு உளுந்தில் 3 பச்சை மிளகாய், சிறிய இஞ்சி துண்டினை சேர்த்து 2 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.

ஸ்டேப் 2:

நன்றாக ஊறிய பிறகு தண்ணீரை வடிகட்டி எடுத்த பிறகு மிக்ஸியில் பேஸ்ட் போன்று அரைத்துக்கொள்ளவும். அரைத்து வைத்துள்ள விழுதினை தனியாக பவுலில் எடுத்துவைத்து கொள்ளவும்.

தவலை வடை செய்வது எப்படி

ஸ்டேப் 3:

பவுலில் தனியாக எடுத்து வைத்துள்ள மாவில் பொடிதாக நறுக்கி வைத்துள்ள அரை கீரையினை இதில் சேர்த்து, அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

ஸ்டேப் 4:

அடுத்ததாக மிளகு – 1/2 டீஸ்பூன், சோம்பு – 1/2 டீஸ்பூன் சேர்த்து இடித்து வைத்துக்கொள்ளவும். இடித்து வைத்துள்ள மிளகு கொம்பினை பிசைந்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து கிளறிவிட வேண்டும்.

நாவிற்கு சுவையூட்டும் காலிஃபிளவர் வடை

ஸ்டேப் 5:

இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி ஹீட் செய்து கொள்ளவும். எண்ணெயானது நன்றாக சூடானதும் மீடியம் பதத்திற்கு வைத்துகொள்ளாலம்.

ஸ்டேப் 6:

அடுத்ததாக வளவளப்பான கவர் அல்லது வாழை இலையில் எண்ணையை தடவி எலுமிச்சை அளவிற்கு சிறிதாக உருட்டி எண்ணெய் தடவி வைத்துள்ள கவர் அல்லது வாழை இலையில் வைத்து மெல்லிசாக கையால் தட்டி வடையின் நடு பகுதியில் சிறிதாக ஓட்டை இட்டுக்கொள்ளவும்.

ஸ்டேப் 7:

அடுத்து காய்ந்த எண்ணையில் தட்டி வைத்துள்ள வடையை போட்டு இரண்டு புறமும் நன்றாக வெந்த நிலையில் வந்த பிறகு எடுக்கவும்.  மாலை நேரத்தில் விரும்பி சாப்பிடக்கூடிய டேஸ்டான கீரை வடை ரெடி. நீங்களும் உங்கள் வீட்டில் சுவையான கீரை வடை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்