புற்று நோயாளிகளுக்கு மருந்து கேழ்வரகு இட்லியா? | Kelvaragu Idli Recipe in Tamil

கேழ்வரகு இட்லி செய்யும் முறை

இன்று சமையல் குறிப்பில் கேழ்வரகு இட்லி செய்வது எப்படி என்று பார்க்க போகிறோம். கேழ்வரகு வைத்து கஞ்சி புட்டு, தோசை போன்றவற்றை சாப்பிட்டு இருப்போம். ஆனால் கேழ்வரகு இட்லி சாப்பிட்டு இருக்கிறீர்களா..? அப்படி சாப்பிட்டது இல்லையென்றால் செய்து பாருங்கள். கேழ்வரகு என்பது உடலுக்கு அதிகளவு நன்மைகள் கிடைக்கும் என்பார்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்கள். சிலருக்கு கேழ்வரகு என்றால் என்ன என்று கூட தெரியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் அதில் உள்ள நன்மைகள் எப்படி தெரியும். கேழ்வரகு உண்மையாகவே புற்றுநோய்க்கு மருந்தாக விலகுகிறது. அதனை தினமும் செய்து சாப்பிடுங்கள் வாங்க இப்போது கேழ்வரகு இட்லி எப்படி செய்வது என்று பார்ப்போம் வாங்க.!

கேழ்வரகு இட்லி செய்யும் முறை:

  1. கேழ்வரகு – 1.1/2 கப்
  2. இட்லி அரிசி – 1 கப்
  3. உளுத்தப்பருப்பு – 1/2 கப்
  4. சிவப்பு அவுல் – 1/4
  5. உப்பு – தேவையான அளவு

Ragi-Idli

அரிசி மற்றும் கேழ்வரகு மாவு அரைக்கும் முன் குறைந்தது  4 மணி நேரமாவது ஊறவைக்க வேண்டும். உளுத்தப்பருப்பு மற்றும் சிவப்பு அவுல் அரைக்கும் முன் 1 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொண்டால் போதுமானது.

இட்லி மாவில் சுவையான தேன் மிட்டாய் செய்வது எப்படி?

ஸ்டேப் -1

முதலில் ஊறவைத்த உளுந்து மற்றும் சிவப்பு அவுல் இரண்டையும் தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும். உளுந்து அரைக்கும் போது 25 நிமிடம் நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும். அப்படி இல்லையென்றால் அரிசி கேழ்வரகு, அவுல் மூன்றையும் சேர்த்து அரைத்துக்கொள்ளலாம்.

ஸ்டேப் -2

கேழ்வரகு இட்லி செய்யும் முறை

அரைத்த பிறகு உளுந்து மாவு இருக்கும் பாத்திரத்தில் மூன்றையும் சேர்த்து அரைத்த மாவையும் கலந்துகொள்ளவும்.

ஸ்டேப் -3

கேழ்வரகு இட்லி செய்யும் முறை

கலக்கும் போது அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கையால் நன்கு இட்லிக்கு மாவு கரைப்பது போல் கரைத்துக்கொள்ளவும் கரைத்த 8 மணி நேரம் புளிக்கவேண்டும். மாறு நாள் காலையில் இட்லி ஊத்தலாம்.

ஸ்டேப் -4

கேழ்வரகு இட்லி செய்யும் முறை

மறு நாள் காலையில் மாவை நன்றாக கலந்து விட்டு அதன் பின் இட்லி ஊத்தவேண்டும். இட்லி மிதமான தீயில் வேகவைக்க வேண்டும்.

ஸ்டேப் – 5

 kelvaragu idli recipe in tamil

வெந்த பின் சூடான மிளகாய் சட்னி சேர்த்து சாப்பிட்டால் வேற மாதிரியான சுவையை அளிக்கும். இந்த டிஸை புற்றுநோயாளிகள் சாப்பிடலால் சுகர் நார்மலாக இருக்கும்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal