கேரளா ஸ்டைல் கடலை கறி சாப்பிட்டா டேஸ்ட் நாக்குலேயே இருக்கும்..!

Kadala Curry Recipe in Tamil

Kadala Curry Recipe in Tamil

கடலை கறி கேள்விப்பட்ட மாதிரி இருக்கா? அப்படி தான் ஏனென்றால் நம் வீட்டில் செய்யாமல் யோசித்து இருப்போம்..! இனியும் யோசிக்காமல் வீட்டில் செய்யலாமா? வாங்க எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

தேவையான பொருட்கள்: 

வெங்காயம்- 1 1/2, தக்காளி –3/4, பச்சை மிளகாய் – 2
கருவேப்பிலை, கொத்தமல்லிசிறிதளவு, மஞ்சள் தூள், உப்பு – தேவையான அளவுஇஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், தாளிக்க பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு- தேவையான அளவு,  மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், தனியா தூள் 1 ஸ்பூன் , கரம் மசாலா 2 டேபிள் ஸ்பூன், வேகவைத்த கொண்டைக்கடலை – 1 கப், தேங்காய்–  1 அரைத்துவைத்துக்கொள்ளவும் , தேங்காய் எண்ணெய்தேவையான அளவு

kerala style kadala curry in tamil

குறிப்பு: கொண்டைக்கடலையை வேகவைக்கும் போது உப்பு போடாமல் அதன் பின் கடைசியாக உப்பு சேர்த்தால் போதும்.

Kadala Curry Seimurai | கடலை கறி செய்முறை: 

ஸ்டேப்: 1

முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய்யை ஊற்றவும். அது சூடானதும் அதில் நாம் எடுத்துவைத்துள்ள பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு போட்டு அது நன்று பொரிந்துவரும்.

ஸ்டேப்: 2

kerala style kadala curry in tamil

பொரிந்துவரும் நிலையில் அதில் கருவேப்பிலை போட்டு அதன் பின் நறுக்கிய வைத்துள்ள வெங்காயத்தை போடவும். அது கொஞ்சம் வதங்கிய பின் அதில் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

ஸ்டேப்: 3

அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும், அதனுடன் தக்காளியை சேர்க்கவும். அது கொஞ்சம் வதங்கிய பின்.

ஸ்டேப்: 4

மசாலா பொருட்களை சேர்க்கலாம். மஞ்சள் தூள் சிறிதளவு, மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், தனியா தூள் 1 ஸ்பூன் , கரம் மசாலா 2 டேபிள் ஸ்பூன் சேர்த்துக்கொள்ளவும். அதனுடன் கடைசியாக தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

சாப்பிடலாம் இதையும் 👉👉 சப்பாத்தி, பூரிக்கு இந்த மாதிரி சென்னா மசாலா செஞ்சி சாப்பிட்டு பாருங்க..!

ஸ்டேப்: 5

கடைசியாக நாம் தண்ணீருடன் வேகவைத்த கொண்டக்கடலையை சேர்த்து கொள்ளவும். வேகவைத்த தண்ணீரை கீழ் ஊறிவிடக்கூடாது. இப்போது அனைத்தையும் சேர்த்து கொண்டைக்கடலையை வேகவிடவும் நன்றாக கொதித்த பின் அதில் கொத்தமல்லி தழையை சேர்த்து அந்த மசாலாவுடன் சேரும் அளவிற்கு கொதிக்கவிடவும்.

ஸ்டேப்: 6

kerala style kadala curry in tamil

முக்கியமாக நாம் எடுத்துவைத்துள்ள தேங்காய் அரைத்த பேஸ்ட் சேர்க்காமல் அதில் இருக்கும் பாலை சேர்க்கவும். அதன் பின் மீண்டும் கரம் மசாலா சேர்த்து தேங்காய் எண்ணெய் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால் அவ்வளவு தான் கேரளா ஸ்டைல் கடலை கறி ரெடி.

இதையும் செய்து சாப்பிடுங்கள் 👉👉 ஒரு முறை வேர்க்கடலை சட்னி இப்படி ட்ரை செய்து பாருங்கள்..! 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal