கோலார் சட்னி செய்முறை | Kolar Chutney Recipe in Tamil
வீட்டில் சமையல் செய்யும் தாய்மார்களுக்கு இருக்கும் குழப்பம் காலை மற்றும் இரவு நேரத்தில் என்ன சட்னி அரைப்பது என்பது தான். இதில் வீட்டில் இருப்பவருக்கு தக்காளி சட்னி பிடிக்கும், தேங்காய் சட்னி பிடிக்காது, இன்னும் சிலருக்கு தேங்காய் சட்னி பிடிக்கும் தக்காளி சட்னி பிடிக்காது. இதனால் வீட்டில் இரண்டு சட்னி அரைக்க வேண்டியதாக இருக்கும். எப்போதும் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி மட்டுமே சாப்பிட்டு அலுத்துப்போன அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்று நாம் ஒரு புதுவிதமான சட்னி செய்வதை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த சட்னிக்கு வெங்காயம் வேண்டாம், தேங்காயும் வேண்டாம். ஆனால் இந்த சட்னியின் சுவை வேற லெவலில் இருக்கும், சரி வாங்க பெயரில் வித்தியாசமாக இருக்கும் இந்த கோலார் சட்னி செய்வது எப்படி என்று இப்பொழுது பார்க்கலாம்.
தேவதையான பொருட்கள்:
- கடலை பருப்பு – 1 1/2 ஸ்பூன்
- வேர்க்கடலை – ஒரு கையளவு
- பூண்டு – 20 பல்
- வரமிளகாய் – 10
- சீரகம் – 1 டீஸ்பூன்
- தக்காளி – 1
- கருவேப்பிலை – இரண்டு கொத்து
- புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – இரண்டு ஸ்பூன்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தக்காளி சேர்க்காமல் சுவையான சட்னி செய்யலாம் வாங்க..!
கோலார் சட்னி செய்முறை – Kolar Chutney Recipe in Tamil:
ஸ்டேப்: 1
அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
ஸ்டேப்: 2
எண்ணெய் சூடானதும் 1 1/2 ஸ்பூன் கடலை பருப்பு, ஒரு கையளவு வேர்க்கடலை இரண்டையும் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
ஸ்டேப்: 3
பின் அதனுடன் 20 பல் பூண்டு, 10 வரமிளகாய், ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
ஸ்டேப்: 4
பின் அதனுடன் நறுக்கிய தக்காளி ஒன்று, கறிவேப்பிலை இரண்டு கொத்து மற்றும் சிறிய நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கிவிடவும்.
ஸ்டேப்: 5
தக்காளி நன்கு வதங்கியதும் அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆறவைக்கவும்.
ஸ்டேப்: 6
வதக்கிய பொருள் நன்கு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்க்கவும், பின் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி நன்றாக பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 7
உங்களுக்கு விருப்பம் இருந்தால் சட்னியை கடுகு, வரமிளகாய், கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளலாம். இல்லை என்றால் இந்த சட்னியை தாளிக்காமலும் அப்படியே சாப்பிடலாம்.
இந்த சட்னி இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள மிகவும் சுவையாக இருக்கும் ஒரு முறை உங்கள் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முள்ளங்கியில் சட்னியா புதுசா இருக்கே.! ட்ரை பண்ணி பாருங்க
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |