1 நிமிடத்தில் கொத்தமல்லி ஊறுகாய் இந்த ரகசியம் யாருக்கு தெரியும்..!

Advertisement

kothamalli oorugai seivathu eppadi

நண்பர்களே வணக்கம் இன்றைய பதின் மூலம் யாருக்கெல்லலாம் ஊறுகாய் சாப்பிடும் பழக்கம் அவர்களுக்கு புதிய ஊறுகாய் பற்றிய பதிவுதான் இது. பொதுவாக மாங்காய் ஊறுகாய், எலுமிச்சை ஊறுகாய், பூண்டு ஊறுகாய், கடாரங்காய் ஊறுகாய், நார்த்தங்காய் ஊறுகாய் என நிறைய வகையான ஊறுகாய் உள்ளது. இதனை அனைவருமே சாப்பிட்டு இருப்பீர்கள். அதன் ருசியும் புதுசாக இருக்கும் பட்சத்தில் கொத்தமல்லி ஊறுகாய் யாரெல்லாம் சாப்பிட்டு இருக்கீர்கள்..! அப்படி அது எனக்கு செய்ய தெரியாது என்றால் அதனை பற்றிய கவலை வேண்டாம் வாங்க அது எப்படி செய்வது என்று தெரிந்துகொள்வோம்..!

கொத்தமல்லி ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்:

  1. ஒரு கைப்பிடி அளவு – கொத்தமல்லி
  2. கடுகு – 1/2 ஸ்பூன்
  3. வெந்தயம் – 1/2 ஸ்பூன்
  4. சீரகம் – 1/2 ஸ்பூன்
  5. எண்ணெய் -1/2 ஸ்பூன்
  6. வர மிளகாய் – 8
  7. புளியை -நெல்லிக்காய் அளவு

கொத்தமல்லி ஊறுகாய் செய்வது எப்படி?

ஸ்டேப் – 1

முதலில் கொத்தமல்லி தலையை சுத்தமாக கழுவி நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப் – 2

அதன்  பின் ஒரு கடாயை எடுத்து அதில் கடுகு – 1/2 ஸ்பூன், வெந்தயம் – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன் இந்த பொருட்களை போட்டு நன்றாக வறுத்துக்கொள்ளவும். இந்த பொருட்களை ஆறவைத்து ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப் – 3

அரைத்த பொருட்கள் அப்படியே இருக்கட்டும். கடாயில் எண்ணெய் -1/2 ஸ்பூன் ஊற்றி வர மிளகாய் – 8, போட்டு வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 4

பின்பு தனியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி தலையை எடுத்து அதையும் தனியாக வதக்கி எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டேப் – 5

பின்பு அதில் தனியாக ஒரு நெல்லிக்காய் அளவு புளி கரைசலை வைத்திருப்போம் அதனை எடுத்து தனியாக கடாயில் ஊற்றி பச்சை தன்மை போகும் வரை கொதிக்கவிடவும்.

ஸ்டேப் – 6

தனியாக அரைத்துவைத்திருக்கும் மசாலா அப்படியே இருக்கட்டும். மற்றோரு மிக்ஸ் ஜாரில் வரமிளகாய் கொத்தமல்லி தழை, தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக துவையல் போல் அரைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப் – 7

பின்பு கடாயில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு – 1/2 ஸ்பூன், வர மிளகாய் – 1, கருவேப்பிலை போட்டு நன்றாக தாளித்து அதில் துவையல் போல் அரைத்து வைத்ததை அதில் சேர்த்து நன்றாக கலந்து விடவும். கடைசியாக கடுகு சீரகம் வறுத்து அரைத்துவைத்திருக்கும் பொருட்களை கொண்டு அதில் சேர்த்து கலந்துவிடவும். தண்ணீர் அளவு கொஞ்சம் கெட்டியாக வரும் வரை கொதிக்கவிட்டு தனியாக ஒரு டப்பாவில் மாத்திக்கொண்டு தினமும் சாதத்திற்கு சேர்த்து சுவைத்து பாருங்கள் நன்றாக இருக்கும்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement