Kovakkai Gravy in Tamil
கோவக்காயை தினமும் நம் உணவில் சேர்த்து வந்தால் உடலில் இருக்கும் பல பிரச்சனைகள் நீங்கும். அந்த அளவிற்கு மருத்துவ குணம் மிக்கது கோவக்காய். எனவே இக்கோவைக்காயை வைத்து அனைவரும் விரும்பி சாப்பிடும் கிரேவி எப்படி செய்வது..? என்பதை இப்பதிவில் பார்க்கலாம். நாம் என்ன தான் பொரியல் கூட்டு என்று சாப்பிட்டாலும் கிரேவியின் சுவையை மிஞ்ச முடியாது. பலபேர் கூட்டு பொரியலை விட கிரேவியை தான் விரும்பி சாப்பிடுவார்கள். அதேபோல் அனைவரும் கோவக்காய் கிரேவியை விரும்பி சாப்பிடுவார்கள். எனவே கோவக்காய் கிரேவியை சுவையாக செய்வது எப்படி என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Kovakkai Gravy For Rice in Tamil:
கோவக்காய் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
- எண்ணெய்- தேவையான அளவு
- கோவக்காய்- தேவையான அளவு
- சீரகம்- 1 ஸ்பூன்
- பெரிய வெங்காயம்- 1
- கடலை மாவு- 2 ஸ்பூன்
- பச்சை மிளகாய்- 3
- இஞ்சி பூண்டு விழுது- 1 ஸ்பூன்
- கொத்தமல்லி, கறிவேப்பிலை- 1 கொத்து
- தக்காளி- 1
- மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்
- மல்லி தூள்- 1 ஸ்பூன்
- மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- கசூரி மேத்தி- 1 ஸ்பூன்
- மிளகு தூள்- 1/2 ஸ்பூன்
கத்திரிக்காய் கிரேவி இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்..! |
Kovakkai Gravy Seivathu Eppadi:
ஸ்டேப் -1
முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் நீட்ட வாக்கில் நறுக்கி வைத்த கோவக்காயை சேர்த்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -2
பிறகு, கோவக்காவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து 3 நிமிடம் வரை நன்றாக வதக்கி ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -3
இப்போது, அதே கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும் சீரகம் சேர்த்து பொரிய விடுங்கள். பிறகு நறுக்கி வைத்த பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப் -4
வெங்காயம் நன்றாக வதங்கியதும், அதனுடன் கடலை மாவு, பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, கசூரி மேத்தி மற்றும் தேவையான அளவு கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப் -5
பிறகு, இதனுடன் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடுங்கள்.
ஸ்டேப் -6
இப்போது, இதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள். 2 நிமிடம் நன்றாக கொதித்ததும் அதில் வதக்கி வைத்த கோவக்காயை சேர்த்து 10 நிமிடம் வரை கொதிக்க விடுங்கள்.
ஸ்டேப் -7
10 நிமிடம் கழித்த பிறகு, 1/2 ஸ்பூன் அளவிற்கு மிளகு தூள் சேர்த்து இறக்கினால் சுவையான கோவக்காய் கிரேவி ரெடி..!
கோவைக்காய் மருத்துவ குணங்கள்..! |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |