Left Over Rice Recipes in Tamil
ஹாய் நண்பர்களே..! நம்மில் பலரின் வீட்டிலேயும் மதியம் சமைத்த சாதம் மீதம் இருந்தால் அந்த சாதத்தை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் அதனை வீணாக்கிவிடுவோம். ஆனால் இனிமேல் அப்படி மீதமுள்ள சாதத்தை வீணாக்கவேண்டாம். ஏனென்றால் மீதமுள்ள சாதத்தை வைத்து என்னசெய்வது என்பதை பற்றி தான் இன்றைய பதிவில் நாம் தெரிந்துக்கொள்ள போகிறோம். அது என்ன ரெசிபி அதனை எவ்வாறு செய்வது என்பதை பற்றியெல்லாம் இந்த பதிவில் காணலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Easy Leftover Rice Recipes in Tamil:
மீதமுள்ள சாதத்தை வைத்து மிகவும் ருசியான பணியாரம் செய்வது என்பதை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதற்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் பார்க்கலாம்.
- சாதம் – 2 கப்
- ரவை – 1 கப்
- அரிசிமாவு – 2 டேபிள் ஸ்பூன்
- வெங்காயம் – 2
- கேரட் – 2
- கொத்தமல்லி – 1 கைப்பிடி
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – 1 1/2 கப்
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் நாம் எடுத்துவைத்துள்ள 2 வெங்காயம், 2 கேரட், 1 கைப்பிடி அளவு கொத்தமல்லி ஆகியவற்றை நன்கு பொடி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
பின்னர் ஒரு மிக்சி ஜாரில் 2 கப் சாதத்தை சேர்த்து அதனுடன் 1/2 கப் தண்ணீரை ஊற்றி நன்கு அரைத்துக்கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 3
அரைத்த அந்த சாதத்தை ஒரு பாத்திரத்தில் வைத்து அதனுடன் 1 கப் ரவை, 2 டேபிள் ஸ்பூன் அரிசிமாவு மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். பிறகு இதனை 1/4 மணிநேரம் அப்படியே ஊறவைத்துக் கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 4
1/4 மணிநேரத்திற்கு பிறகு அது நன்கு ஊறி பணியார மாவு பதத்திற்கு மாறிவிடும். இப்போது அந்த மாவுடன் நாம் முன்பே பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கேரட், கொத்தமல்லி ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். இப்போது நமது பணியாரமாவு தயார் ஆகிவிட்டது.
ஸ்டேப் – 5
அதன் பிறகு அடுப்பில் பணியார சட்டியை வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றிகொள்ளுங்கள். பின்னர் அதில் நாம் தயார் செய்துவைத்துள்ள பணியாரமாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நன்கு முன்னும் பின்னும் பிரட்டி வேகவைத்து அதை எடுத்து அனைவருக்கும் பரிமாறுங்கள். நீங்களும் இந்த பணியாரத்தை உங்கள் வீட்டில் செய்து சுவைத்துப்பாருங்கள்.
மீதமுள்ள சாதத்தை இப்படி ட்ரை பண்ணி பாருங்க டேஸ்ட் சூப்பரா இருக்கும்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |