Cooked Rice Recipes in Tamil
எங்கள் வீட்டில் முதல் நாள் அல்லது மதியம் சமைத்த சாதம் மீதமுள்ளது ஆனால் அதனை என்ன செய்வது என்று தெரியாமல் சிலர் அதனை குப்பையில் தூக்கி போட்டுவிடுவார்கள். ஆனால் ஒரு சிலர் அதனை வத்தல் போல செய்து சாப்பிடுவார்கள். அப்படி உங்களின் வீட்டில் முதல் நாள் அல்லது மதியம் சமைத்த சாதம் மீதமுள்ளது என்றால் இந்த பதிவில் கூறியுள்ள ரெசிபியை ஒரு முறை செய்து சுவைத்து பாருங்க.
அப்புறம் உங்கள் வீட்டில் எப்பொழுதெல்லாம் சாதம் மிட்சமாகிறதோ அப்பொழுதெல்லாம் இந்த ரெசிபியை செய்து சாப்பிடுவீர்கள். சரி வாங்க அது என்ன ரெசிபி அதனை எவ்வாறு செய்யவேண்டும் என்பதை பற்றியெல்லாம் விரிவாக காணலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Left Over Boiled Rice Recipes in Tamil:
இந்த ரெசிபிக்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் பார்க்கலாம்.
- சாதம் – 2 கப்
- வெங்காயம் – 4
- பச்சைமிளகாய் – 2
- கொத்தமல்லியிலை – 2 கைப்பிடி அளவு
- கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு
- அரிசிமாவு – 1 1/2 கப்
- மிளகாய்தூள் – 2 டீஸ்பூன்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- பூண்டு – 10 பற்கள்
- சிவப்புமிளகாய் சாஸ் (Red Chilli Sauce) – 2 டீஸ்பூன்
- பச்சைமிளகாய் சாஸ் (Green Chilli Sauce ) – 2 டீஸ்பூன்
- சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
- சோளமாவு(Corn Flour) – 2 டீஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
மீதமுள்ள இட்லியை வைத்து இப்படி கூட செய்யலாமா
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் ஒரு மிக்சி ஜாரில் நாம் எடுத்து வைத்துள்ள 2 கப் சாதத்தை போட்டு நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் 2 வெங்காயம், 2 பச்சைமிளகாய், 1 கைப்பிடி அளவு கொத்தமல்லியிலை மற்றும் 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
இதனுடன் 1 1/2 கப் அரிசிமாவு, 1 டீஸ்பூன் சீரகம், 2 டீஸ்பூன் மிளகாய்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 3
பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதில் நாம் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு நன்கு பொறித்து எடுத்துக்கொள்ளுங்கள்.
மீதமுள்ள சாதத்தை இப்படி ட்ரை பண்ணி பாருங்க டேஸ்ட் சூப்பரா இருக்கும்
ஸ்டேப் – 4
பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் 10 பற்கள் பூண்டு, 2 வெங்காயம் ஆகியவற்றை நன்கு பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 5
இதனுடன் 2 டீஸ்பூன் சிவப்புமிளகாய் சாஸ், 2 டீஸ்பூன் பச்சைமிளகாய் சாஸ் மற்றும்1 டீஸ்பூன் சோயா சாஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 6
பின்னர் இதனுடனே நாம் எடுத்துவைத்துள்ள 2 டீஸ்பூன் சோளமாவுடன் சிறிதளவு தண்ணீரை சேர்த்து நன்கு கலந்து ஊற்றிக்கொள்ளுங்கள். இவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று நன்கு கலந்தவுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொத்திக்கவிடுங்கள்.
ஸ்டேப் – 7
அனைத்து பொருட்களும் ஒன்றுடன் ஒன்று நன்கு கலந்து கொதித்த பிறகு அதனுடன் நாம் முன்னரே பொறித்து எடுத்து வைத்திருந்த உருண்டைகளை சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அதன் மீது 1 கைப்பிடி அளவு கொத்தமல்லியிலையை நன்கு பொடி பொடியாக நறுக்கி தூவி இறக்கி அனைவருக்கும் பரிமாறுங்கள்.
இந்த ரெசிபியை நீங்களும் உங்களின் வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்-> | Samayal kurippu tamil |