கோதுமை மாவு, மைதா மாவு இல்லாமல் சூப்பரான மசாலா பூரி செய்வது எப்படி வாங்க தெரிந்துகொள்ளலாம்..!

Advertisement

Maharashtrian Masala Puri Recipe in Tamil

தினமு இட்லி தோசை செய்து சாப்பிட்டு இருப்போம்..! அதேபோல் சப்பாத்தி சாப்பிட்டிருப்போம், முக்கியமாக சொல்லப்போனால் பூரி சாப்பிட்டிருப்போம். பூரி என்றால் கோதுமை மாவு, அல்லது மைதா மாவில் செய்வது மட்டுமே நமக்கு தெரியும் ஆனால் இன்று நாம் பார்க்க போகும் பூரி செய்வது புதிதாக இருக்கும். அதுவும் கோதுமை மாவு, மைதா மாவு பயன்படுத்தாமல் செய்வது எப்படு என்று இந்த பதிவு வாயிலாக தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

மகாராஷ்டிரா மசாலா பூரி செய்ய தேவையான பொருட்கள்: 

  1. பெரிய சைஸ் உருளைக்கிழங்கு – 1 அல்லது 2
  2. ஒரு பெரிய கப் – அரிசி மாவு
  3. இஞ்சி, பச்சை மிளகாய் பேஸ்ட் –  சிறிதளவு
  4. மஞ்சள் தூள்-  1 டீஸ்பூன்
  5. ஓமம் – 1/2 ஸ்பூன்
  6. சீரகம் – 1 ஸ்பூன்
  7. 2 – மிளகாய் இடித்தது.
  8. கொத்தமல்லித்தழை – சிறிதளவு
  9. உப்பு – தேவையான அளவு

ஸ்டேப்- 1

  • முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்தது ஒரு கிணத்தில் எடுத்து பிசைந்துகொள்ளவும்.

ஸ்டேப்- 2

  • அதனை பின் அதில் ஒரு கப் அரிசி மாவு சேர்த்துக்கொள்ளவும். அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய் பேஸ்ட் –  சிறிதளவு, மஞ்சள் தூள்-  1 டீஸ்பூன், ஓமம் – 1/2 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், 2 – மிளகாய் இடித்தது, கொத்தமல்லித்தழை  சிறிதளவு, உப்பு – தேவையான அளவு அனைத்தையும் சேர்த்து பிசைந்துகொள்ளவும்.

ஸ்டேப்- 3

  • பின்பு அதில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி கொள்ளவும். இதில் கோதுமை மாவு சேர்க்காமல் இருப்பதால் சப்பாத்திக்கட்டையில் தேய்க்க முடியாது அதனால் பெரிய கவர் எடுத்துக்கொள்ளவும் அதில் மாவை உருண்டையாக வைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்- 4

  • அதன் மீது கவரை வைத்து அதன் மீது ஒரு தட்டை வைத்து அழுத்தவும். இப்போது ஒரு பூரி சைசியில் இருக்கும்.

ஸ்டேப்- 5

ஒரு கடாயை வைக்கவும் அதில் பூரி வேகும் அளவிற்கு எண்ணெயை ஊற்றி கொள்ளவும் எண்ணெய் சூடானதும் அதில் ஒவ்வொன்றாக போட்டு எடுக்கவும்.

பின்பு தட்டில் எடுத்து உங்களுக்கு பிடித்த பூரி குருமாவை வைத்து சுவைக்கலாம்.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 அரிசி மாவில் பூரி சுட முடியும்.! உங்களுக்கு தெரியுமா.?

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement