மஹாராஷ்டிரா ஸ்பெஷல் மசாலா பூரி செய்வது எப்படி..?

Maharashtrian Masala Puri Recipe in Tamil

Masala Poori Recipe in Tamil

இன்றைய சமையல் குறிப்பு பதிவில் நாம் பார்க்க இருப்பது மஹாராஷ்டிரா ஸ்பெஷல் மசாலா பூரி செய்வது எப்படி என்பதை பற்றி தான். பொதுவாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு ஏதாவது எளிமையான முறையில் மற்றும் அவர்களுக்கு பிடித்த மாதிரியான உணவு செய்து தரவேண்டும் என்ற ஆசை நம் மனதில் இருக்கும்.

ஆனால் அப்படி என்ன செய்து தருவது என்ற குழப்பமும் இருக்கும். அதனால் இந்த பதிவில் கூறியுள்ள மஹாராஷ்டிரா ஸ்பெஷல் மசாலா பூரி ரெசிபியை ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்கள். குழந்தைகளுக்கும் இந்த ரெசிபி மிகவும் பிடிக்கும் உங்களுக்கும் செய்து தர மிகவும் எளிமையாக இருக்கும். சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.

Maharashtrian Masala Puri Recipe in Tamil:

முதலில் இந்த மசாலா பூரி ரெசிபிக்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. உருளைக்கிழங்கு – 2 பெரியது 
  2. அரிசிமாவு – 2 கப் 
  3. இஞ்சிப் பச்சைமிளகாய் பேஸ்ட் – 2 டீஸ்பூன் 
  4. மஞ்சள்தூள் – 2 டீஸ்பூன் 
  5. சீரகம் – 1 டீஸ்பூன் 
  6. ஓமம் – 1 டீஸ்பூன் 
  7. மிளகாய் செதில்கள்( chilli flakes) – 2 டீஸ்பூன்
  8. கொத்தமல்லியிலை – 1 கைப்பிடி அளவு 
  9. எண்ணெய் – தேவையான அளவு  
  10. உப்பு – தேவையான அளவு 
  11. தண்ணீர் – தேவையான அளவு 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

செய்முறை:

Crispy puri recipe in tamil

ஸ்டேப் – 1

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 2 பெரிய உருளைக்கிழங்குகளையும் நன்கு வேகவைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை நன்கு மசித்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 2

பின்னர் ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு அதனுடன் 2 கப் அரிசிமாவு, 2 டீஸ்பூன் இஞ்சிப் பச்சைமிளகாய் பேஸ்ட், 2 டீஸ்பூன் மஞ்சள்தூள், 1 டீஸ்பூன் சீரகம், 1 டீஸ்பூன் ஓமம் மற்றும் 2 டீஸ்பூன் மிளகாய் செதில்கள்( chilli flakes) ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 3

பின்னர் அதனுடன் 1 கைப்பிடி அளவு கொத்த மல்லியிலையை நன்கு பொடியாக நறுக்கி சேர்த்து கலந்துக்கொள்ளுங்கள். பிறகு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பூரி மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 4

Masala Poori Recipe in Tamil

பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள். பின்னர் அதனை பூரி போல் தேய்த்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி நன்கு சூடுபடுத்திக்கொள்ளுங்கள்.

பின்னர் அதில் நாம் தேய்த்து வைத்துள்ள பூரியை போட்டு முன்னும் பின்னும் பிரட்டிப்போட்டு நன்கு வேகவைத்து எடுத்தால் நமது மஹாராஷ்டிரா ஸ்பெஷல் மசாலா பூரி தயாராகிவிட்டது.

இதனுடன் சன்னமசாலா அல்லது பூரி குருமா வைத்து பரிமாறினால் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதையும் படியுங்கள்=> அரிசி மாவில் பூரி சுட முடியும்.! உங்களுக்கு தெரியுமா.?

இதுபோன்று சுவைசுவையான சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்பு