மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி? | Meal Maker Gravy in Tamil

Meal Maker Gravy in Tamil

மீல் மேக்கர் கிரேவி செய்முறை – Meal Maker Gravy in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. கிரேவி ரெசிபிள் பலவகையான ரெசிபி இருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் மீல் மேக்கர் கிரேவி. இந்த மீல் மேக்கர் கிரேவியை எப்படி செய்ய வேண்டும் என்பதற்கான செய்முறை விளக்கத்தை இந்த பதிவில் நாங்கள் பதிவு செய்துள்ளோம். அவற்றை படித்து செய்முறை விளக்கத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இந்த மீல் மேக்கர் கிரேவியை இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என்று அனைத்திற்கும் தொட்டுக்கொள்வதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இதன் சுவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

மசாலா தயார் செய்வதற்கு:

  • எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
  • பூண்டு – 10 பற்கள்
  • இஞ்சி – இரண்டு துண்டுகள்
  • சின்ன வெம்கயம் – 10
  • தக்காளி – இரண்டு
  • மல்லி – ஒரு டீஸ்பூன்
  • சோம்பு – ஒரு டீஸ்பூன்
  • சீரகம் – ஒரு டீஸ்பூன்
  • மிளகு – அரை டீஸ்பூன்
  • கிராம்பு – நான்கு
  • நட்சத்திர சோம்பு – ஒன்று
  • ஜாத்திபத்திரி – ஒன்று
  • பிரிஞ்சி இலை – ஒன்று
  • பட்டை – ஒன்று
  • முந்திரி – 5

தாளிப்பதற்கு:

  • எண்ணெய் – மூன்று டேபிள் ஸ்பூன்
  • நெய் – டேபிள் ஸ்பூன்
  • ஏலக்காய் தூள் – 12/ டீஸ்பூன்
  • பட்டை – ஒன்று
  • சோம்பு – 1/2 ஸ்பூன்
  • கொத்தமல்லி இலை – சிறிதளவு
  • புதினா – சிறிதளவு
  • கருவேப்பிலை – சிறிதளவு
  • முந்திரி – 7
  • சின்ன வெங்காயம் – 100 கிராம் (பொடிதாக நறுக்கியது)
  • மீல் மேக்கர் – 250 கிராம்
  • மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
  • மல்லி தூள் – 2 டேபிள் ஸ்பூன்
  • கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
  • கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா – சிறிதளவு
  • தண்ணீர் – இரண்டு கப்
  • உப்பு – தேவையான அளவு

வீடே மணக்க மணக்க இறால் கிரேவி செய்வது எப்படி?

மீல் மேக்கர் கிரேவி செய்முறை – Meal Maker Gravy in Tamil:

ஸ்டேப்: 1

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெயை சேர்த்து சூடுபடுத்தி கொள்ளுங்கள்.

எண்ணெய் நன்கு காய்ந்தது 10 பற்கள் பூண்டு, இரண்டு துண்டு இஞ்சி, சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.

அதன் பிறகு மல்லி – ஒரு டீஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், கிராம்பு – நான்கு, நட்சத்திர சோம்பு – ஒன்று, ஜாத்திபத்திரி – ஒன்று, பிரிஞ்சி இலை – ஒன்று, பட்டை – ஒன்று மற்றும் முந்திரி – 5 ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். (முந்திரிக்கு பதில் தேங்காய் கூட சேர்த்து கொள்ளலாம்)

நன்றாக வதங்கிய பின் மிக்ஷியல் நன்றாக அரைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 2

அதன்பிறகு 250 கிராம் மீல் மேக்கரை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அவற்றில் நல்ல சூடான நீரை ஊற்றி 10 நிமிடங்கள் நன்றாக ஊறவைக்க வேண்டும்.

10 நிமிடம் கழித்து மீல் மேக்கரை அந்த நீரில் இருந்து தனியாக எடுத்து தண்ணீர் இல்லாமல் நன்றாக பிழிந்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 3

அதன் பிறகு அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அவற்றில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை சேர்த்து கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும்.

1/2 ஸ்பூன் ஏலக்காய் தூள், 1/2 ஸ்பூன் சோம்பு, பட்டை ஒன்று ஆகியவற்றை சேர்த்து நன்றாக தாளித்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு சிறிதளவு கொத்தமல்லி இலை, புதினா, கருவேப்பிலை  ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

பின் 7 முந்திரி பருப்புகளை சேர்த்து வதக்கிவிடுங்கள். முந்திரி பருப்புகளை வதக்கிய பின்பு பொடிதாக நறுக்கிய சின்ன வெங்கயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

சிக்கன் கிரேவி இப்படி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா ஆளா தூக்கும்!!

ஸ்டேப்: 4

அதன் பிறகு மீல் மேக்கர் – 250 கிராம், மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மல்லி தூள் – 2 டேபிள் ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன் ஆகிய மசாலா பொருட்களை சேர்த்து 30 நிமிடங்கள் வதக்கிவிடுங்கள். அந்த சமயம் அடுப்பை மிதமான சூட்டில் வைத்திருக்க வேண்டும்.

ஸ்டேப்: 5

மசாலா பொருட்களை வதக்கிய பிறகு ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மசாலாவை இப்பொழுது சேர்த்து நன்றாக கிளறிவிடுங்கள்.

அதன்பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் இரண்டு கப் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து ஒருமுறை கிளறி விடுங்கள். கிளறிய பின் குக்கரை மூடி 4 விசில் வரும் வரை நன்றாக வேக வெக்க வேண்டும்.

நன்கு விசில் வந்த பிறகு அடுப்பை ஆப் செய்து விடுங்கள். பின் குக்கரில் பிரஷர் அனைத்தும் அடங்கியபின் திறக்கவும்.

meal maker gravy

இப்பொழுது சுவையான மற்றும் டேஸ்டியான மீல் மேக்கர் கிரேவி தயார்.. அனைவருக்கும் அன்புடன் பரிமாறுங்கள் நன்றி வணக்கம்..

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>  சமையல் குறிப்புகள்