மொச்சை கொட்டை குழம்பு செய்வது எப்படி..? | Mochai Kottai Kulambu Recipe in Tamil
பொதுவாக பயிரில் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்துள்ளது. அந்த பயிறு வகைகளில் ஒன்றான மொச்சை கொட்டையை வைத்து சுவையான காரக்குழம்பு எப்படி செய்வது என்பதைத் தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். மொச்சை குழம்பு பல பேர் வைத்திருக்க மாட்டீர்கள். கிராமங்களில் தான் இந்த மொச்சை குழம்பு அடிக்கடி செய்வார்கள். ஓகே வாருங்கள் இந்த மொச்சை கொட்டை காரக்குழம்பு சுவையாக செய்வது என்று இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
Mochai Kottai Kulambu in Tamil:
மொச்சை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
- வெள்ளை மொச்சை- தேவையான அளவு
- கத்திரிக்காய் – 4
- தேங்காய்- சிறிதளவு
- வெல்லம்- சிறிதளவு
- நல்லெண்ணெய்- தேவையான அளவு
- வெந்தயம்- 1/2 ஸ்பூன்
- கடுகு- 1/2 ஸ்பூன்
- கருவேப்பிலை- 2 கொத்து
- பூண்டு- 15 பல்லு
- காய்ந்த மிளகாய்- 3
- தக்காளி- 2
- சின்ன வெங்காயம் – 30
- புளி- சிறிதளவு (எலுமிச்சை அளவு)
- உப்பு- தேவையான அளவு
- மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்
- மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
- குழம்பு தூள்- 3 ஸ்பூன்
- பெருங்காயத் தூள்- 1/2 டீஸ்பூன்
மசாலா செய்ய தேவையான போட்கள்:
- கடலைப்பருப்பு- 1 ஸ்பூன்
- மிளகு- 1 ஸ்பூன்
- வெந்தயம்- 1/2 ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
ஐயர் வீட்டு முருங்கைக்காய் குழம்பு..! வீட்டு வாசல் வரை மணக்கும்..! |
மொச்சை குழம்பு செய்வது எப்படி.?
ஸ்டேப்: 1
முதல் நாள் இறவே மொச்சையை தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள். மறுநாள் குழம்பு வைப்பதற்கு முன் புளியை ஊறவைத்து கரைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 2
அதன் பின், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, வெந்தயம் சேர்த்து கொள்ளவும்.
ஸ்டேப்: 3
கடுகு, வெந்தயம் பொரிந்ததும் அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அதனுடன் காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 4
அதன் பின் அடுப்பை குறைவாக வைத்து அதனுடன் தக்காளி மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 5
இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் அதில் ஊறவைத்த மொச்சை மற்றும் நறுக்கி வைத்த கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.
பாகற்காய் குழம்பு கசப்பில்லாமல் இப்படி செய்யுங்க..! யாரும் வேண்டான்னு சொல்ல மாட்டாங்க…! |
ஸ்டேப்: 6
அடுப்பில் உள்ள பொருட்கள் வதங்கியதும், அதில் புளி கரைசலை சேர்த்து அதனுடன், மஞ்சள் தூள், மிளகாய் தூள், குழம்பு தூள் போட்டு நன்றாக கலந்து விடவும். பிறகு தேவையான அளவு தண்ணீர், உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
ஸ்டேப்: 7
பிறகு அதனுடன் சிறிதளவு தேங்காயை அரைத்து சேர்த்து கொள்ளுங்கள். இப்போது அதில் ஒரு சிறிய அளவில் வெல்லத்தை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடுங்கள்.
ஸ்டேப்: 8
பிறகு ஒரு வாணலில் சீரகம், வெந்தயம், மிளகு, கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை 5 நிமிடம் கழித்து ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 9
இதை குழம்புடன் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் சூப்பரான சுவையான மொச்சைக்கொட்டை காரக்குழம்பு தயார்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |