Mullangi Cutney in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் முள்ளங்கி சட்னி செய்வது எப்படி என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். முள்ளங்கியில் நீர் சத்து அதிகம் உள்ளது. இதனை நாட்டம் உணவில் சேர்த்துக்கொள்வது உடலிற்கு மிகவும் நல்லது. முள்ளங்கியை வைத்து சாம்பார், காரக்குழம்பு, பொரியல், கூட்டு போன்றவை தான் செய்திருப்போம். இந்த மாதிரி செய்யும் போது முள்ளங்கியை பெரிதும் சாப்பிட மாட்டார்கள். முள்ளங்கியை பிடிக்காதவர்களுக்கு கூட இந்த மாதிரி சட்னி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க முள்ளங்கி சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
முள்ளங்கி சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
- கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
- உளுந்து – 1 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் – 4
- கருவேப்பிலை – 1 கைப்பிடி
- முள்ளங்கி –1
- புளி – சிறிதளவு
- எண்ணெய் – 3 தேக்கரண்டி
சட்னி செய்முறை:
ஸ்டேப்:1
அடுப்பில் கடாயை வைத்து கடலை பருப்பு 1 தேக்கரண்டி, உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி சேர்த்து சிவக்க வறுத்து கொள்ளவும். அதனுடன் காய்ந்த மிளகாய் 4, கருவேப்பிலை, சிறிதளவு புளி சேர்த்து வறுக்க வேண்டும். இந்த வறுத்த பொருட்களை ஆற வைத்து கொள்ளவும்.
ஸ்டேப்:2
பின் அதே கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம் 10, நறுக்கிய முள்ளங்கி 1 சேர்த்து வதக்கவும். அதனுடன் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
ஸ்டேப்:3
அடுத்து வதக்கிய பொருட்கள் அந்த அனைத்தையும் மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ளவும். பின் அடுப்பில் கடாய் வைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து அதில் கடுகு சேர்த்து, கடுகு பொரிந்ததும் கருவேப்பிலை சேர்த்து பின் அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்க்கவும். அவ்ளோ தாங்க சுவையான முள்ளங்கி சட்னி ரெடி.!
இதையும் செய்து பாருங்கள் ⇒ ஒரே சட்னி செய்யாமல் இந்த சட்னி செய்து பாருங்க..! சுவை சும்மா அள்ளும்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |