சுவையான தீபாவளி முறுக்கு செய்வது எப்படி?

Advertisement

Murukku Suduvathu Eppadi Tamil

பொதுவாக தீபாவளி என்றால் முதலில் நியாபகத்திற்கு வருவது முறுக்கு தான். அதனை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதனால் தீபாவளி வரப்போகிறது என்றால் முதலில் சூடுவது முறுக்கு தான். இப்போது கடையில் தான் மாவு வாங்கி அதில் முறுக்கு செய்வார்கள். அதேபோல் அதனின் சுவையும் சற்று குறைவாக தான் இருக்கும். என்ன தான் கடையில் வாங்கி முறுக்கு செய்தாலும் அதனின் சுவையும் சற்று குறைவாகத்தான் இருக்கும். ஆனால் நாம் வீட்டில் மாவு அரைத்து அதில் முறுக்கு சுட்டு சாப்பிட்டால் அதனின் சுவையே தனி தான் வாங்க தீபாவளி ஸ்பெஷல் முறுக்கு எப்படி செய்வது என்று பார்ப்போம்..!

முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்:

  1. அரிசி மாவு – 2 கப்
  2. வெள்ளை உளுந்து – 1/2 கப்
  3. பொட்டுக்கடலை – 1/4 கப்
  4. பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
  5. வெள்ளை எள் – 1 தேக்கரண்டி
  6. வெண்ணை – 2 தேக்கரண்டி
  7. உப்பு – தேவையான அளவு
  8. எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

முறுக்கு செய்வது எப்படி தமிழில்:

ஸ்டேப்: 1 

முதலில் கடாயை அடுப்பில் வைத்து 1/2 கப் வெள்ளை உளுந்து சேர்த்து 2 அல்லது 3  நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வறுக்கவும். பின்பு அதனை தனியாக எடுத்து வைக்கவும்.

ஸ்டேப்: 2

பின்பு உளுந்து ஆறியதும் அதனை மிக்சியில் போட்டு அரைக்கவும். அரைத்த பின் அந்த மாவை எடுத்து சலிக்கவும்.

ஸ்டேப்: 3

பின்பு கனமான பாத்திரத்தில் 2 கப் அரிசி மாவு, 1/2 கப் உளுந்து மாவு 1 தேக்கரண்டி வெள்ளை எள், 2 தேக்கரண்டி வெண்ணெய், 1/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள்  சேர்க்கவும்.

ஸ்டேப்: 4

இது அனைத்தையும் சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு கலந்துகொள்ளவும். பின்பு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும். பின்பு நன்றாக பிசைந்துகொள்ளவும்.

ஸ்டேப்: 5

மாவு நன்றாக முறுக்கு பதத்திற்கு வந்தவுடன் முறுக்கு அச்சியை எடுத்து உரலில் போட்டுக்கொள்ளவும்.

ஸ்டேப்: 6

கடைசியாக ஒரு வாணலியில் முறுக்கு பொரித்து எடுக்க தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றி சூடாகும் வரை காத்திருக்கவும்.

ஸ்டேப்: 7

சூடானதும் ஒரு சிறிய தட்டிலோ அல்லது இலையிலோ முறுக்கை பிளிந்துகொள்ளவும். எண்ணெய் சூடானதும் அதில் போட்டு 1 நிமிடம் வேகவிடவும் அதன் பின் திருப்பி போட்டு 1 நிமிடம் வேக வைக்கவும்.

இப்போது வெந்த பின் தனியாக பாத்திரத்தில் எடுத்து வைக்கவும், மீதமுள்ள மாவையும் பிழிந்து முறுக்கு சுட்டு எடுக்கவும் அவ்வளவு தாங்க தீபாவளி முறுக்கு ரெடி.

தீபாவளிக்கு இந்த ரவா உருண்டையை செய்திடுங்கள் அதன் சுவையே தனிதான்

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal kurippu tamil
Advertisement