மட்டன் பிரியாணி செய்வது எப்படி – Mutton Biryani in Tamil
Mutton Biryani Tamil Recipe:- பிரியாணி என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். பிரியாணியில் உள்ள வாசனைக்காகவே பலர் ஒரு கரண்டி கூடுதலாக சாப்பிடுவார்கள். அப்படி ஒரு சுவையில் இருக்கும் பிரியாணி. பிரியாணியில் பல வகைகள் உள்ளது. சிக்கன் பிரியாணி, காளான் பிரியாணி, முட்டை பிரியாணி, மீன் பிரயாணி, இறால் பிரியாணி என்று பல வகைகள் இருக்கும். என்னதான் பல வகையான பிரியாணி இருந்தாலும் மட்டன் பிரியாணியின் சுவைக்கு நிகர் வேறு எந்த பிரியாணி இல்லை. மதியம் உணவாக அருமையான சுவையில் மட்டன் பிரியாணி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம்.
மட்டன் பிரியாணி செய்வது எப்படி.? | Mutton Biryani Seivathu Eppadi
பிரியாணி மசாலா பொருட்கள்:
- நட்சத்திர சோம்பு (அன்னாசி பூ) – ஒன்று
- ஜாதிபத்திரி – ஒன்று
- இலவங்கப்பட்டை – ஒன்று
- ஏலக்காய் – மூன்று
- கிராம்பு – நான்கு
- சீரகம் – ஒரு டீஸ்பூன்
- சோம்பு – 1/2 டீஸ்பூன்
- மிளகு – 1/2 டீஸ்பூன்
- மல்லி – இரண்டு ஸ்பூன்
- பிரியாணி இலை – ஒன்று
குக்கரில் மட்டன் பிரியாணி செய்வது எப்படி தமிழ்
மட்டன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
- எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
- நெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் – மூன்று
- கிராம்பு – மூன்று
- பிரியாணி இலை – ஒன்று
- பெரிய வெங்காயம் – இரண்டு (நைசாக நாறுகிறது)
- உப்பு – தேவையான அளவு
- பச்சை மிளகாய் – 5 (நேர் வாக்கில் கீறியது)
- இஞ்சி பூண்டி விழுது – இரண்டு ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன்
- மல்லி இலை – ஒரு கைப்பிடியளவு
- புதினா இலை – ஒரு கைப்பிடியளவு
- தக்காளி – இரண்டு (பொடிதாக நறுக்கின)
- கட்டி தயிர் – 1/2 கப்
- பாஸ்மதி அரிசி – 500 கிராம்
- ஆட்டுக்கறி – 500 கிராம்
மட்டன் பிரியாணி செய்யும் முறை – Mutton Biryani in Tamil:
ஸ்டேப்: 1
கேஸ் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் பிரியாணி மசாலா செய்வதற்கு மேல் முதலாவதாக கூறப்பட்டுள்ள பொருட்களான நட்சத்திர சோம்பு, ஜாதிபத்திரி, இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு, சீரகம், சோம்பு, மிளகு, மல்லி மற்றும் பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் மிக்ஸியில் இந்த பொருட்களை நைசாக அரைத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் பிரியாணி மசாலா தயார்.
ஸ்டேப்: 2
இப்பொழுது அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அவற்றில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து சூடேற்றவும். எண்ணெய் சூடேறியதும் ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
ஸ்டேப்: 3
வெங்காயம் பொன்னிறமாக வந்த பிறகு இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 5 பச்சமிளகாய், மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், அரைத்த பிரியாணி மசாலா 1 1/2 ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
ஸ்டேப்: 4
மசாலா நன்கு வதங்கிய பின் ஒரு கையளவு மல்லி இலை, ஒரு கையளவு புதினா ஆகியவற்றை சேர்த்து வதக்குங்கள்.
ஸ்டேப்: 5
பிறகு பொடிதாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும், தக்காளி நன்கு வதங்கியதும், 1/2 கப் தயிர் சேர்த்து கிளறிவிடுங்கள்.
ஸ்டேப்: 6
அடுத்ததாக 500 கிராம் ஆட்டுக்கறி சேர்த்து வதக்க வேண்டும். பின் ஒரு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 4 விசில் வரும் வரைக்கும் வேக வைக்கவேண்டும்.
ஸ்டேப்: 7
நான்கு விசில் வந்த பிறகு பிரஷர் அடங்கியது குக்கரை தின்றது 500 கிராம் பாஸ்மதி அரிசி, ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பி தேவையான அளவு சேர்த்து கிளறி விடுங்கள். பின் குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரைக்கு வேக வைக்க வேண்டும். ஒரு விசில் வந்த பிறகு அடுப்பை ஆப் செய்து விடுங்கள்.
பின் குக்கரை 15 நிமிடங்கள் கழித்து குக்கரை திறக்க வேண்டும். அவ்வளவு தாங்க சுவையான மற்றும் உதிரி உதிரியான மட்டன் பிரியாணி தயார். உங்கள் வீட்டில் ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்.
மீன் பிரியாணி செய்வது எப்படி? |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |