Nandu Rasam Easy Recipe in Tamil
மீன் குழம்பு, கறி குழம்பு என்று வாரம் தவறாமல் சாப்பிடுவது வழக்கமாக வைத்திருப்போம், ஆனால் சில நேரத்தில் மீன் கறியை விட நண்டு மீது அதிகளவு ஆசை வரும் அதனை சாப்பிட அவ்வளவு சூப்பராக இருக்கும்.
அதுவும் ரசத்திற்கு நண்டு வறுவல் வைப்பார்கள் அய்யோ டேஸ்ட் சூப்பராக இருக்கும். அதனை விட நண்டை கொண்டு ஒரு ரசம் செய்கின்றன அதன் சுவை வேற லெவலில் இருக்கும். அதனை எப்படி செய்வது என்று இந்த பதிவில் படுத்து தெரிந்துகொள்வோம் வாங்க..!
Nandu Rasam Recipe in Tamil:
- கடல் நண்டு
- மிளகு தூள்
- மிளகாய் தூள்
- இஞ்சி பூண்டு பேஸ்ட்
- பிரிஞ்சி இலை
- தக்காளி
- வெங்காயம்
- உப்பு
- இந்த அனைத்து பொருட்களுமே உங்களுடைய தேவைக்கேற்ற சேர்த்துக்கொள்ளலாம்.
சிம்பிளான செட்டிநாடு இறால் குழம்பு செய்வது எப்படி ?
ஸ்டேப்: 1
முதலில் நண்டை கழுவி இடித்து தனியாக தண்ணீர் ஊற்றி வைத்துக்கொள்ளலாம்.
ஸ்டேப்: 2
இப்போது அடுப்பில் மண் சட்டியை வைத்து அதில் நண்டை போடவும்.
ஸ்டேப்: 3
அதில் வெங்காயம் தக்காளி, பச்சை மிளகாய், பிரிஞ்சி இலை, இஞ்சி பூண்டு இடித்து போட்டாலும் சரி பேஸ்ட் போட்டாலும் உங்கள் வசதிக்கு ஏற்றது போல் சேர்த்துக்கொள்ளவும்.
செய்யலாமா 👉👉 அசத்தலான நண்டு குழம்பு செய்யலாம் வாங்க..!
ஸ்டேப்: 4
பின்பு அதில் கருவேப்பிலை, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், இப்போது அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றவும்.
ஸ்டேப்: 5
பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மிதக்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும். அதனை மூடி வைத்து கொதிக்கவிடவும்.
ஸ்டேப்: 6
இது அனைத்தும் நன்கு வெந்தவுடன் ஒரு சூப் போல் இருக்கும் அதனை எடுத்து ஒரு கிணத்தில் ஊற்றி பக்கத்தில் மிளகு தூள் வைத்துகொண்டு.
அதில் கலந்து குடித்தால் ஐயோ டேஸ்ட் வேற லெவல்.
வீடே மணக்க மணக்க இறால் கிரேவி செய்வது எப்படி?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |