நீர் தோசை செய்ய தெரியுமா உங்களுக்கு..?

Advertisement

நீர் தோசை செய்வது எப்படி?

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் அனைவரும் விரும்ப கூடிய சமையல் குறிப்பை பற்றி தான் பார்க்கப்போகிறோம். உங்களுக்கு ஒரே விதமான தோசை செய்து கொடுத்த அலுத்துபோகிறுக்கும். ஆகையால் இந்த பதிவு சமைக்கும் தாய்மார்களுக்கு உதவியானதாக இருக்கும். இந்த நீர் தோசை செய்வதற்கு உளுந்து மாவு தேவையில்லை. உளுந்து மாவு இல்லாமல் நீர் தோசை செய்வது எப்படி என்று யோசிக்கிறீர்களா. தொடர்ந்து இந்த பதிவை பார்த்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

இதையும் படித்து பாருங்கள் தோசை மாவு இல்லாமல் சுவையான பிரெட்                            தோசை செய்வது எப்படி?

நீர் தோசை செய்ய தேவையான பொருட்கள்:

  • பச்சை அரிசி- 1கப் 
  • துருவிய தேங்காய்- 1/2 கப் 
  • உப்பு- தேவையான அளவு 
  • எண்ணெய்- தேவையான அளவு 

நீர் தோசை செய்முறை விளக்கம்:

ஸ்டேப்-1

நீங்கள் எப்போதும் தோசை ஊற்றுவதற்கு செய்வது போல பச்சை அரிசியை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். அதன் பிறகு மறுநாள் காலையில் தண்ணீர் இல்லாமல் அரிசியை நன்றாக பிழிந்து மிக்சி ஜாரில் போட்டு அதனுடன் துருவிய தேங்காயையும் சேர்த்து கொள்ளுங்கள். இந்த இரண்டு பொருளையும் சேர்த்து கொஞ்சம் சொர சொரப்பாக அரைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்-2

பின் மிக்சியில் இருக்கும் மாவு கெட்டியான பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். மாவை சிறிது கையில் எடுத்து தோசை ஊற்றும் பதத்திற்கு வந்து விட்டதா என்று பாருங்கள். அப்படி இருந்தால் ஒரு பாத்திரத்தில் மாவை எடுத்து வைத்துவிடுங்கள்.

ஸ்டேப்-3

பாத்திரத்தில் உள்ள மாவுடன் தேவையான அளவு உப்பு, 2 கப் தண்ணீர் ஊற்றி மாவை நன்றாக கலந்து விடுங்கள். அவ்வளவு தான் நீர் தோசை ஊற்றுவதற்கு மாவு தயார் நிலையில் உள்ளது.

ஸ்டேப்-4

கடைசியாக அடுப்பை பற்ற வைத்து அதில் தோசை கல்லை வையுங்கள். தோசை கல்லு சூடான பிறகு தோசையை  ஊற்றி அதற்கு தேவையான அளவு எண்ணெய் தோசை மேல் ஊற்றுங்கள். தோசை வெந்தவுடன் சாம்பார், சட்னி சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் சுவையாக இருக்கும்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal kurippu tamil
Advertisement