நீர் கொழுக்கட்டை செய்வது எப்படி? | Neer Kolukattai Recipe in Tamil

Advertisement

புழுங்கல் அரிசி நீர் கொழுக்கட்டை செய்வது எப்படி? | Neer Kolukattai Seivathu Eppadi

வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நம்ம சமையல் குறிப்பில் பார்க்க போகிறது நீர் கொழுக்கட்டை ரெசிபி. சிலருக்கு கார வகையை விட இனிப்பு வகை பிடிக்கும். இன்னும் சிலருக்கு கொழுக்கட்டை மாதிரியான டிஷ் என்றால் மிகவும் பிடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த நீர்கொழுக்கட்டை செய்வதற்கு உங்களுக்கு அதிக பொருட்கள் எல்லாம் தேவைப்படாது. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்து சாப்பிடலாம். நீர் கொழுக்கட்டை செய்ய 30 நிமிடம் போதுமானது ஆகும். ஆகவே இந்த நீர் கொழுக்கட்டை ஈசியான முறையில் செய்வது எப்படி? என்பதை இந்த பதிவில் காண்போம் வாங்க.

தேவைப்படும் பொருட்கள்:

  1. அரிசி – 3.1/4 (3 மணி நேரம் ஊற வைக்கவும்)
  2. தேங்காய் – 1/2 மூடி (துருவியது)
  3. உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

ஸ்டேப்: 1

ஊறவைத்த அரிசியை மிக்சியில் போட்டு கொர கொரவென்று அரைக்கவும். பின் அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக்கொள்ளவும்.

பால் கொழுக்கட்டை செய்யும் முறை

 

ஸ்டேப்: 2

வாணலியில் அரைத்து வைத்த மாவு, அதோடு தேங்காய் துருவல், தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கிளறவும்.

ஸ்டேப்: 3

கிளறி வைத்த மாவை உருண்டையாக பிடித்து வைக்கவும்.

ஸ்டேப்: 4

இப்போது ஒரு கனமான பாத்திரத்தில் கொழுக்கட்டை வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின் தண்ணீர் கொதிக்கும் போது உருண்டையாக பிடித்து வைத்த மாவை அதில் போடவும்.

சுவையான நீர் உருண்டை செய்வது எப்படி

 

ஸ்டேப்: 5

கொழுக்கட்டை வெந்தவுடன் தண்ணிரில் மிதக்கும் பிறகு அதனை எடுத்து சாப்பிடலாம். இனிப்பு விரும்பியவர்கள் வெள்ளம் சேர்த்து சாப்பிடலாம். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய நீர் கொழுக்கட்டை ரெடி.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சுவை சுவையான சமையல் குறிப்புகள்!!!
Advertisement