நீர் உருண்டை செய்வது எப்படி? | Neer Urundai Seivathu Eppadi
வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நாம் பார்க்க போகிறது என்னவென்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் விரும்பி சாப்பிட கூடிய நீர் உருண்டை தான். இது எல்லாருக்கும் சீக்கிரமாக ஜீரணமாகக்கூடிய ஒரு டிஷ். இதன் சுவை எப்போதும் நாக்கில் எச்சில் ஊற வைக்கும். இது அதிகமாக எல்லாரும் செய்து சாப்பிடுவார்கள். இது மிகவும் ஈசியான சுவையான டிஷ். அதை தஞ்சாவூர் ஸ்டைலில் செய்து சாப்பிடுவோம் வாங்க.
பொறி அரிசி உருண்டை செய்வது எப்படி |
தேவையான பொருட்கள்:
- இட்லி அரிசி -1/4 கிலோ
- கடுகு -1 ஸ்பூன்
- உளுந்து – 1 ஸ்பூன்
- கடலை பருப்பு -1 ஸ்பூன்
- பெருங்காயத்தூள் – சிறிதளவு
- காய்ந்த மிளகாய் – 3
- கறிவேப்பிலை – இரண்டு கொத்து
- தேவையான அளவு – உப்பு
- ஒரு தேங்காயில் – பாதி (சிறிய சிறிய துண்டாக நறுக்கியது)
நீர் உருண்டை செய்முறை விளக்கம்:
ஸ்டேப் -1
- நான்கு மணி நேரம் ஊறவைத்த அரிசியை மிக்சியில் போட்டு கொரகொர என்று அரைக்கவும். பின் அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ளவும்.
ஸ்டேப் -2
- வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு கொள்ளவும். பின் அதில் மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு நன்கு வதக்கிய பின் பொன்னிறமாக மாறியதும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
ஸ்டேப் – 3
- பின்பு அதில் கடைசியாக பெருங்காயத்தூள், தேங்காய் போட்டு நன்கு வதக்கிய பின், கரைத்து வைத்த மாவை சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
பன்னீர் கோலா உருண்டை செய்வது எப்படி |
ஸ்டேப் – 4
- மாவு ஆரிய பின் மிதமான சூட்டில் இருக்கும் போது உருண்டை உருண்டையாக பிடித்துக்கொள்ளவும்.
ஸ்டேப் – 5
- இட்லி அவிக்கும் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின்பு இட்லி தட்டில் உருண்டையாக உருட்டி வைத்த மாவை எடுத்து வைத்து அவிக்கவும்.
- 15 நிமிடத்திற்கு பிறகு எடுத்து பார்க்கவும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய நீர் உருண்டை ரெடி.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |