Onion Cashew Pakoda in Tamil
என்ன தான் பக்கோடா சாப்பிட்டாலும் வாயில் வைத்த உடன் கரைவது தான் அதனுடைய சுவையே..! கடைகளுக்கு சென்றால் அங்கு நிறைய விதமான பக்கோடா இருக்கும் அது அனைத்துமே பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும் சுவை தனி தான்.
அதிலும் வெங்காய பக்கோடா என்று சொல்லி அதை பொரித்து தட்டில் வைத்திருப்பார்கள் அதனை பார்க்கும் போதே வாயில் எச்சில் ஊரும். அதனை விட ருசியான பகோடா இருக்கிறது அதுதான்முந்திரி பக்கோடா அவனை வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்ப்போம் வாங்க..!
Onion Cashew Pakoda in Tamil:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
தேவையான பொருட்கள்:
- கடலை மாவு – 200 கிராம்
- அரிசி மாவு – 100 கிராம்
- சோம்பு – 1 டீஸ்பூன்
- கருவேப்பிலை – 1 கைப்பிடி
- வெங்காயம் – 1 கை அளவு
- முந்திரி – 1 கை அளவு
- மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
- பெருங்கயத்தூள் – 1 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
ஸ்டேப்: 1
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும். அடுப்பு மீடியம் தீயில் இருக்கட்டும். இப்போது பக்கோடா மாவு செய்வொம் வாங்க..!
ஸ்டேப்: 2
ஒரு பத்திரத்தை எடுத்து அதில் கடலை மாவு 200 கிராம் எடுத்துக்கொள்ளவும், பிறகு அரிசி மாவு 100 கிராம் சேர்க்கவும்.
இதையும் செய்து சாப்பிடலாம் 👉👉 ஆரோக்கியமான ராகி பக்கோடா சுவையாக செய்யலாம் வாங்க.
ஸ்டேப்: 3
பின்பு அதில் உப்பு தேவையான அளவு, சோம்பு 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன், மிளகாய் தூள் 1 டீஸ்பூன், கருவேப்பிலை சிறிதளவு, முந்திரி பருப்பு 1 கைப்பிடி, வெங்காயம் 1 கைப்பிடி சேர்க்கவும். இப்போது அதனை ஒரு முறை கலந்துவிடவும்.
ஸ்டேப்: 4
தண்ணீர் எதுவும் ஊற்ற கூடாது தெளிக்க வேண்டும். இப்போது எண்ணெய் காய்ந்த நிலையில் இருக்கும் அதனை 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து பிசைந்துகொள்ளவும்.
ஸ்டேப்: 5
கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பிசையவும் இப்பொழுது மாவு ரெடி.
ஸ்டேப்: 6
மாவு ரெடி ஆகிவிட்டது எண்ணெயும் சுடக்கிருக்கும் முதலில் மழை சாரல் போல் பிசைந்து வைத்த மாவை எண்ணையில் போட்டு பொரிக்கவும். சிறிது நேரத்திற்கு பிறகு மறுபக்கம் திருப்பவும்.
அவ்வளவு தான் முந்திரி பக்கோடா ரெடி இதற்கு மாலை நேரத்தில் டீ க்கு சேர்த்து சாப்பிடால் அவ்வளவு சூப்பராக இருக்கும்.
இதையும் படியுங்கள் ⇒ 10 நிமிடத்தில் மீந்துபோன சாதத்தை வைத்து சூப்பரான மாலை நேர ஸ்னாக்ஸ் செய்து பாருங்கள்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |