இனிமேல் ஆரஞ்சு பழத்தோலை தூக்கியெறியாமல் இந்த ரெசிபியை ஒருமுறை செய்து சுவைத்து பாருங்கள்..!

Orange Peel Candy Recipe in Tamil

Orange Peel Candy Recipe in Tamil

பொதுவாக பள்ளியில் இருந்து திரும்பி வரும் குழந்தைகளுக்கு ஏதாவது சுவையான மற்றும் ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் செய்து தர வேண்டும். மேலும் நாம் செய்து தரும் ஸ்னாக்ஸ் அவர்களுக்கு பிடித்த மாதிரியும் இருக்க வேண்டும் என்று சிந்தனை செய்பவரா நீங்கள் அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்.

ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் உங்கள் வீட்டில் வீணாக தூக்கிப்போடும் ஆரஞ்சு தோலை பயன்படுத்தி மிட்டாய் செய்வது எப்படி என்பதை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள சமையல் குறிப்பினை பயன்படுத்தி உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஆரஞ்சு மிட்டாயை செய்து தந்து பாராட்டினை பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Orange Peel Candy Recipe in Tamil:

முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. ஆரஞ்சு தோல் – 1 கைப்பிடி அளவு 
  2. நாட்டு சர்க்கரை – 1 1/2 கப் 
  3. ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன் 
  4. தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

ஸ்டேப் -1 

Orange Peel Candy Recipe in Tamil

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு ஆரஞ்சு தோலினை நன்கு சுத்தம் செய்து விட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப் -2

பின்னர் அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி அதில் நாம் நறுக்கி வைத்துள்ள ஆரஞ்சு தோல்களை சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> ஆரஞ்சு தோலுடன் இதை மட்டும் கலந்து போடுங்கள் முகம் எப்போதும் பளிச்சென்று ஜொலிக்கும்

ஸ்டேப் -3

Easy Orange Peel Candy Recipe in Tamil

பிறகு அடுப்பில் மற்றொரு பாத்திரத்தை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 1/2 கப் நாட்டு சர்க்கரையை சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள்.

ஸ்டேப் -4

Easy Orange Peel Candy Recipe Tamil

இப்பொழுது அதனுடன் நாம் வேக வைத்து எடுத்து வைத்துள்ள ஆரஞ்சு தோல்களை சேர்த்து நன்கு ஒன்றுடன் ஒன்று கலக்குமாறு கலந்து கொள்ளுங்கள்.

இறுதியாக அதன் மீது நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் ஏலக்காய் தூளினை சேர்த்து நன்கு கலந்து எடுத்து அதனை ஒரு தட்டில் வைத்து நன்கு ஆற விடவும்.

பின்னர் அதனை அனைவருக்கும் பரிமாறுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> உங்கள் வீட்டில் வாழைப்பழம் உள்ளதா அப்போ இந்த ரெசிபியை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal