Paneer Korma Recipe in Tamil
இனிமேல் கடையில் வாங்கி ஏமாறாதீங்க..! இந்த குருமா கடையில் தான் கிடைக்கும் என்று அதற்கு ஆசைபட்டு அதனை சாப்பிடுவார்கள். அப்படி என்ன குருமா என்று அனைவருமே யோசிப்போம் பன்னிர் குருமா தான். அதற்கு ஆசைபட்டு சிலர் கடையில் சாப்பிட ஆசைபடுவார்கள். இனிமேல் வீட்டிலேயே சாப்பிடலாம். அது செய்வது அவ்வளவு பெரிய கஷ்டம் இல்லை உடனே செய்து சாப்பிடலாம். அதற்கு வீட்டில் இருக்கும் பொருட்கள் போதும், புதிதாக வாங்குவது என்றால் அது பன்னீர் தான். வாங்க அது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Paneer Korma Recipe in Tamil:
- சீரகம் – 1 டீஸ்பூன்
- சோம்பு – 1 ஸ்பூன்
- கொத்தமல்லி விதை – 1 டீஸ்பூன்
- பாதாம் – 7
- கசகசா – 1 ஸ்பூன்
- முலாம் பழம் விதை – 1 டீஸ்பூன்
- பட்டை – 1
- கருப்பு ஏலக்காய் – 1
- ஜாதிபத்திரி பூ – 2
- பச்சை ஏலக்காய் – 3
- கிராம்பு – 7
- கருப்பு மிளகு – 6
- வெங்காயம் – 2
- தக்காளி – 1
- பச்சைமிளகாய் – 1
- நெய் – 1 டேபிள் ஸ்பூன்
- முந்திரி – 10
- பூண்டு – 5
- இஞ்சி – 4 துண்டு
- கஸ்தூரி மேத்தி – 2 டேபிள் ஸ்பூன்
- தயிர் – 1 கப்
- கடலைமாவு – 2 டேபிள் ஸ்பூன்
- கொத்தமல்லி தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
- பன்னீர் – 250 கிராம்
ஸ்டேப்: 1
முதலில் அடுப்பை பற்றவைத்து அதில் சீரகம் – 1 டீஸ்பூன்,சோம்பு – 1 ஸ்பூன், கொத்தமல்லி விதை – 1 டீஸ்பூன், பாதாம் – 7, கசகசா – 1 ஸ்பூன், முலாம் பழம் விதை – 1 டீஸ்பூன், பட்டை – 1, கருப்பு ஏலக்காய் – 1, ஜாதிபத்திரி பூ – 2, பச்சை ஏலக்காய் – 3, கிராம்பு – 7, கருப்பு மிளகு – 6 சேர்த்து 1 நிமிடம் அப்படியே வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஸ்டேப்: 2
அடுத்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி தனியாக வைத்துக் கொள்ளவும். அடுத்து அதே கடையில் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் ஊற்றி வெங்காயம் தக்காளியை வதக்கவும். அது மெரூன் நிறத்தில் மாறி விடவேண்டும். அதன் பிறகு அதனை தனியாக ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
ஸ்டேப்: 3
இப்போது மிக்ஸ் ஜாரை எடுத்துக் கொள்ளவும் அதில் வதக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்க்கவும் அதன் பின் நாம் எடுத்துக் கொண்ட முந்திரி, பூண்டு – 5, இஞ்சி – 4 துண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 சுவையான வெஜிடபிள் பிரியாணி
ஸ்டேப்: 4
அடுத்து ஒரு கப்பில் தயிர் எடுத்துக் கொள்ளவும். அதில் கடலைமாவு – 2 டேபிள் ஸ்பூன், கொத்தமல்லி தூள் – 1 டேபிள் ஸ்பூன், மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் சேர்த்து கலந்து தனியாக வைக்கவும்.
ஸ்டேப்: 5
அடுத்து பன்னீரை எடுத்து கட் செய்து தனியாக வைத்துக் கொள்ளவும். அடுத்து கடாயில் நெய் ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள பன்னீரை சேர்த்து ஒரு முறை வதக்கவும். வதக்கிய பின் தனியாக எடுத்து வைக்கவும்.
ஸ்டேப்: 6
அதே கடாயில் கொஞ்சம் நெய் ஊற்றி சீரகம் – 1 டீஸ்பூன், பட்டை 1, ஏலக்காய் 3, நட்சத்திர சோம்பு – 1 பிரியாணி இலை- 1, கிராம்பு – 4 , மிளகு 7 சேர்த்து வதக்கவும். அதன் பின் நாம் அரைத்து வைத்துள்ள பேஸ்டை சேர்க்கவும்.
அதனுடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து கலந்து விடவும். அதன் பின் தயிர் மசாலா செய்ததை அதில் சேர்க்கவும். பின் நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து கலந்து 1 நிமிடம் அப்படியே மூடி வைக்கவும்.
ஸ்டேப்: 7
இதற்கு இடையில் ஒரு கடாயில் கஸ்தூரி மேத்தி – 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து வறுத்துக் கொள்ளவும், அடுத்து அதனை இறக்கி கைகளை வைத்து பிசைந்து தனியாக வைக்கவும்.
ஸ்டேப்: 8
1 நிமிடத்திற்கு பிறகு அதனை திறந்து அதில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அதன் பின் அதில் வறுத்து பொடி செய்த கஸ்தூரி மேத்தியை கலந்து விடவும்.
ஸ்டேப்: 9
அடுத்து எடுத்து வைத்துள்ள பன்னீரை அதில் சேர்த்து கலந்து விடவும். பிறகு 8 நிமிடம் அப்படியே மூடி வேக விடவும். அதன் பின் இறக்கி மூடியை திறந்து ஒரு முறை கலந்து விட்டு கொத்தமல்லி தழையை போட்டு இறக்கவும். அவ்வளவு தான் பன்னீர் குருமா ரெடி..!
இதையும் செய்து சாப்பிடுங்கள் 👉👉 அடடா விடுமுறையில் இப்படி ஒரு பிரியாணி சாப்பிடனும் டேஸ்ட் நாக்குலேயே இருக்கிறது..! அதற்கு பெயர்தான் பன்னீர் பிரியாணி ..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |