பன்னீர் மசாலா கிரேவி செய்வது எப்படி.?
வணக்கம் நண்பர்களே..! இன்றைய சமையல் குறிப்பு பதிவில் ஒரு புதிய வகையான கிரேவி ரெசிபியை பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம். சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, முட்டை கிரேவி, இறால் கிரேவி, நண்டு கிரேவி இதுபோன்ற அசைவ கிரேவி ரெசிபிக்களை தூக்கி சாப்பிடும் அளவிற்கு சுவையான பன்னீர் மசாலா கிரேவி செய்வது எப்படி என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொண்டு நீங்களும் உங்கள் வீட்டில் செய்து கொடுத்து அசத்துங்கள். இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துக்கொண்டு பயன்பெறுங்கள்.
இதையும் படியுங்கள்⇒ சுவையான பன்னீர் புலாவ் செய்வது எப்படி?
பன்னீர் மசாலா கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
- பன்னீர்- 200 கிராம்
- நறுக்கிய வெங்காயம்- 2
- நறுக்கிய தக்காளி- 2
- மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி
- தன்யா தூள்- 2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
- கர மசாலா தூள்- 1 தேக்கரண்டி
- இஞ்சி, பூண்டு பேஸ்ட்- 2 தேக்கரண்டி
- எண்ணெய்- தேவையான அளவு
- உப்பு- தேவையான அளவு
- பால் ஆடை- 1 தேக்கரண்டி
- ஏலக்காய்- 2
- பட்டை- சிறிதளவு
- கிராம்பு- சிறிதளவு
- கருவேப்பில்லை- சிறிதளவு
பன்னீர் மசாலா கிரேவி செய்முறை விளக்கம்:
ஸ்டேப்- 1
முதலில் நீங்கள் எடுத்து வைத்துள்ள பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு எடுத்து வைத்துள்ள மசாலா பொடி மற்றும் சிறிதளவு உப்பு இவை அனைத்தையும் பன்னீருடன் சேர்த்து ஒரு 5 நிமிடம் கலந்து வைக்க வேண்டும்.
ஸ்டேப்- 2
அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைய்யுங்கள். அந்த பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கலந்து வைத்துள்ள பன்னீர் மசாலா பொருட்களை அதில் போட்டு வதக்கி தனியாக வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 3
அடுத்ததாக அடுப்பில் மற்றொரு பாத்திரம் வைத்து அந்த பாத்திரம் காய்ந்த உடன் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்றாக வதக்கி சிறிது நேரம் அதை ஆற வைத்து விடுங்கள். அதன் பிறகு வதக்கி வைத்துள்ள பொருட்களை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து விடுங்கள்.
ஸ்டேப்- 4
கடைசியாக அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் தேவையான அளவு ஊற்றி எடுத்து வைத்துள்ள கிராம்பு, பட்டை, ஏலக்காய், பால் ஆடை, சிறிதளவு உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக 5 நிமிடம் வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 5
5 நிமிடம் களித்த பிறகு வதக்கி வைத்துள்ள பன்னீர் மசாலா பொருள், மிக்சி ஜாரில் அரைத்த பேஸ்ட் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒரு 10 நிமிடம் அடுப்பில் கொதிக்க விடுங்கள். மசாலா பொருட்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்தவுடன் கருவேப்பிலை, கொத்தமல்லி தூவி விட்டு கிரேவியை அடுப்பில் இருந்து இறக்கி விடுங்கள்.
அவ்வளவு தான் நீங்கள் எதிர்பார்த்த சுவையான பன்னீர் மசாலா கிரேவி தயார். இந்த கிரேவியை சப்பாத்தி, இட்லி, தோசை, பரோட்டா அனைத்திற்கும் சைடிஷாக சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
இதுபோன்ற சுவைசுவையான சமையல் குறிப்புகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சுவைசுவையான சமையல் குறிப்புகள் |