பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி வீட்டிலே பன்னீர் சான்விச் செய்வது எப்படி?

Advertisement

சான்விச் செய்முறை

நண்பர்களே வணக்கம்…! சான்விச் செய்வது எப்படி என்பது அதிகளவு யாருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை இதை அதிகம் குழந்தைகள் தான் விரும்பி சாப்பிடுவார்கள். இதை குழந்தைகள் அதிகம் சாப்பிடுவதால் அவர்களின் உடலுக்கு கெட்டது என்று அதிகம் சாப்பிடக்கூடாது என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்லிவிடுவார்கள். ஏனென்றால் இதை வெளியிடங்களில் வாங்கி சாப்பிட்டால் தான் உடலுக்கு கேடு என்று சொல்லலாம்,  இனி வீட்டிலே செய்து கொண்டுங்கள் என்று இப்போது பிள்ளைகள் கேட்டுவிட்டார்கள் ஆனால் நமக்கு அதனை செய்ய தெரியாது என்று சொல்லிவிடுகிறோம். இனி அதனை பற்றி கவலை வேண்டாம் நீங்களும் சான்விச் செய்யலாம் அதுவும் பன்னிர் சான்விச் எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ள போகிறோம்.

சான்விச் செய்ய தேவையான பொருட்கள்:

 paneer sandwich recipe in tamil

 

  1. 400 கிராம் பன்னீர்
  2. தேவையான அளவு பிரெட்
  3. பெரிய வெங்காயம்  – 1 1/2
  4. பச்சை மிளகாய் – 2
  5. குடை மிளகாய் -1
  6. பல் பூண்டு -5
  7. இஞ்சி – ஒரு துண்டு ஒன்றில் பாதி காரத்திற்கு ஏற்றது
  8. கரம் மசாலா – 1தேக்கரண்டி
  9.  சாட் மசாலா -1தேக்கரண்டி
  10. தனியா தூள் -1தேக்கரண்டி
  11.  சீரக தூள் 1தேக்கரண்டி
  12.  அம்ச்சூர் தூள் 1தேக்கரண்டி
  13.  புதினா – சிறிதளவு
  14. கொத்தமல்லி – சிறிதளவு மற்ற பொருட்கள் அனைத்தும் தேவைக்கேற்றது.
  15.  பட்டர்
  16.  சீஸ்
  17.  எண்ணெய்
  18.  உப்பு

சான்விச் செய்முறை:

ஸ்டேப் -1

  • முதலில் வெங்காயம், பூண்டு, குடை மிளகாய், கொத்தமல்லி, மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி தனியாக வைக்கவும்.
  • பின்பு ஒரு எலுமிச்சை பழத்தை பாதியை எடுத்து தனியாக சாறு எடுத்துவைக்கவும்.

ஸ்டேப் -2

இப்போது ஒரு மிக்ஸ்லி ஜாரில் நறுக்கி வைத்த அரை வெங்காயம் கொத்தமல்லி, புதினா, ஒரு பச்சை மிளகாய், 2 பல் பூண்டு, இஞ்சி போன்றவற்றை எடுத்து அதன்கூடவே எடுத்துவைத்த எலுமிச்சை சாறு எடுத்து அனைத்தையும் தேவையான அளவு உப்பு போட்டு அரைத்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப் -3

பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு அதிலில் மீதும் நறுக்கி வைத்த வெங்காயத்தை வதக்கவும் நன்கு வதக்கிய அதில் நம் எடுத்துவைத்த 3 பல் பூண்டு சேர்த்து ஒரு பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

ஸ்டேப் -4

வதங்கிய பின் நறுக்கி வைத்த குடைமிளகாயை சேர்த்து குறைந்தது 6 மணி நேரம் கலந்து வதக்கவேண்டும்.

ஸ்டேப் -5

பின்பு தேவைக்கேற்ற உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, அம்ச்சூர் தூள், சாட் மசாலா, தனியா தூள், மற்றும் சீரக தூள் சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும்.

ஸ்டேப் -6

அடுத்தது கலந்து வதக்கிய மசாலாவில் சிறு சிறு துண்டாக நறுக்கிய பன்னீர் போட்டு அதனை மசாலாவை சேர்த்து கலந்துவிடவும். பன்னீரை துண்டு துண்டாக நறுக்கி போட்டால் அது தண்ணீர் விடும் அதனால் நறுக்கி போடுவது நல்லது.

ஸ்டேப் -7

5 நிமிடத்திற்கு பிறகு நறுக்கி வைத்த கொத்தமல்லியை தூவி கிளறி அடுப்பை விட்டு இறக்கிவிடவும்.

ஸ்டேப் -8

பின்பு ஒரு பிரெட் எடுத்துக்கொள்ளவும் அதில் வெண்ணெய் தடவிக்கொள்ளவும். அதில் புதினா சட்னி  தடவிக்கொள்ளவும்.

ஸ்டேப் -9

மறுமுறை ஒரு பிரெட் எடுத்து அதில் பன்னீர் ஸ்டாப்பிங்கை அவரவர் டேஸ்ட் ஏற்றத்தை போல் சீஸ் தூவி மற்றொரு பிரட் அதன் மீது வைக்கவும்.

ஸ்டேப் -10

இப்போது கடாயில் வெண்ணையை போட்டு ஊருகவிடவும். பின் அதில் நாம் செய்து வைத்திருக்கும் சான்விச் வைத்து சிறிது நேரம் வேக வைக்கவும். சிறிது நேரம் கழிந்து பின்புறம் திருப்பு வைக்கவும்.

ஸ்டேப் -11

சிறிது நேரம் கழித்து சுட சுட சாஸ் வைத்து சாப்பிடவும் டேஸ்ட் சூப்பராக இருக்கும்.

இப்போது நீங்கள் பன்னீர் டிக்கா செய்யவேண்டும் என்றால் இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.⇒ பலவகையான பன்னீர் ரெசிபி

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement