சுவையான பீர்க்கங்காய் சட்னி.! இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அப்புறம் விடவே மாட்டீர்கள்.

peerkangai chutney recipe in tamil

பீர்க்கங்காய் சட்னி

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் பீர்க்கங்காய் சட்னி மிகவும் எளிதாக குழந்தைகள் முதல் பெரியவர்கள்  வரை விரும்பி சாப்பிடும் அளவிற்கு எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். இந்த பீர்க்கங்காய் சட்னியை இட்லி, தோசை மற்றும் சாதத்தில் பிசைந்து கூட சாப்பிடலாம். அதை விட இந்த பீர்க்கங்காய் சட்னியானது உடலுக்கு பல ஆரோக்கியங்களையும் தருகிறது, பீர்க்கங்காய்யில் அதிகமான நார்ச்சத்துக்களும், நிர்ச்சத்துக்களும் நிறைந்து  உள்ளது, மேலும் இந்த பீர்க்கங்காய் சட்னியை மிகவும் சுவையோடு அட்டகாசமாக செய்யலாம் வாங்க.

குழந்தைகளுக்கு இந்த மாதிரி பூண்டு சட்னி செய்து கொடுங்கள்

பீர்க்கங்காய் சட்னிக்கு தேவையான பொருட்கள்:

 • பீர்க்கங்காய்-250 gm 
 • எண்ணெய் -2 ஸ்பூன் 
 • உளுத்தம் பருப்பு -2 ஸ்பூன் 
 • கருவேப்பிலை
 • பெருங்காயம்- சிறிய துண்டு
 • வரமிளகாய் -4
 • புளி -சிறுதுண்டு 
 • பூண்டு பல்-6
 • சின்ன வெங்காயம்-15
 • தக்காளி -1 
 • உப்பு- தேவையான அளவு 
 • தேங்காய் துருவல் -சிறிதளவு 

பீர்க்கங்காய் சட்னிக்கு செய்யும் முறை:

ஸ்டேப்:1

முதலில் பீர்க்கங்காயை எடுத்து அதனுடைய தோல்களை நீக்கி கொண்டு அதனை சிறு சிறு துண்டுகளாக கட் செய்து,  தண்ணீரில் நன்றாக கழுவி வைத்துக்கொள்ள வேண்டும்.

ஸ்டேப்:2

அடுத்ததாக ஒரு கடாயை எடுத்து கொண்டு அடுப்பில் மிதமான சூட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். கடாய் சூடானதும் அதில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் அதில் உளுத்தம் பருப்பை சேர்த்து பொரியவிட வேண்டும்.

ஸ்டேப்:3

உளுத்தம் பருப்பு  பொரிந்ததும் அதில் கட்டி பெருங்காயம் அல்லது பெருங்காயத்தூள் சேர்த்துகொள்ள வேண்டும். அடுத்ததாக அதில் கருவேப்பிலை, சேர்க்கவும், கருவேப்பிலை அதிகமாக சேர்ப்பதால் வாசனையாக இருக்கும். அடுத்ததாக அதில் நான்கு வரமிளகாய் சேர்த்து வதக்கி விட வேண்டும்.

ஸ்டேப்:4

இவற்றை வதக்கிய பிறகு அதில் சிறிய துண்டு புளி சேர்த்துக்கொள்ள வேண்டும். அதுகூடவே பூண்டு பல், சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும், சின்ன வெங்காயம் அதிகமாக சேர்ப்பதால் சட்னி சுவையாக அமைக்கிறது.

ஸ்டேப்:5 

சின்ன வெங்காயம் கலர் மாறும் வரை நன்றாக வதக்க வேண்டும், அதன் பிறகு தக்காளி சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும். அதன் பிறகு நம்ப கட் செய்து வைத்த பீர்க்கங்காயை அந்த கடாயில் சேர்த்து எல்லாத்தையும் நன்றாக வதக்க வேண்டும். நன்றாக வதங்கிய பிறகு அதில் சிறிதளவு தேங்காய் சேர்த்து உப்பு சேர்த்து கலந்த பிறகு அதை வேக வைக்க வேண்டும்.

ஸ்டேப்:6 

வேக வைத்த பிறகு அதில் கொஞ்சம் கொத்தமல்லி சேர்த்து வதக்கி விட வேண்டும், 2 நிமிடம் வரையும் வேக வைக்க வேண்டும். வெந்த பிறகு மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும், அதனை தாளித்து சாப்பிட விரும்புபவர்கள் எண்ணெய் சேர்த்து 2 வரமிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து, அரைத்து வைத்த  பீர்க்கங்காயை தாளிப்பில் சேர்த்து சாப்பிட வேண்டியத்தான், இதேபோல் நீங்களும்  உங்கள் வீட்டில் செய்துபாருங்கள்.!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்