பெப்பர் சிக்கன் செய்வது எப்படி..! Pepper Chicken Recipe..!

Advertisement

பெப்பர் சிக்கன் செய்யும் முறை..! Pepper Chicken Gravy Recipe..!

ஹாய் ஃப்ரண்ட்ஸ்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் ஒரு சூப்பரான ரெசிபி பார்க்க போறோம். அது என்ன ரெசிப்பினு பார்த்தோம்னா பெப்பர் சிக்கன் வீட்டிலேயே(Pepper Chicken Home cooking) எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். சிக்கன் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரொம்பவே விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. சரி வாங்க இப்போது பெப்பர் சிக்கன் செய்முறையை விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

newசுவையான சமையல் சிக்கன் லாலிபாப் செய்முறை விளக்கம்..!

பெப்பர் சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்:

  1. சிக்கன் – 1 கிலோ 
  2. நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் 
  3. சின்ன வெங்காயம் – 300 கிராம் (நறுக்கியது)
  4. இஞ்சி / பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் 
  5. மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் 
  6. மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் 
  7. தனியா தூள் – 1 டீஸ்பூன் 
  8. உப்பு – 1 1/2 டீஸ்பூன் 
  9. மிளகு தூள் – தேவையான அளவு 
  10. சீரக தூள் – 1 டீஸ்பூன்
  11. கருவேப்பிலை – சிறிதளவு 
  12. தண்ணீர் – தேவையான அளவு 
சிக்கன் 65 செய்வது எப்படி 

செய்முறை விளக்கம் 1:

முதலில் அகலமான கடாயில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணையை ஊற்ற வேண்டும். அடுத்து நறுக்கிய சிறிய வெங்காயத்தை கடாயில் இருக்கும் எண்ணெயுடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும். இதன் பச்சை வாடை போகும் வரை வதக்கி கொள்ளவும்.

செய்முறை விளக்கம் 2:

அடுத்து கடாயில் மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன் அளவிற்கு சேர்க்கவும். அடுத்ததாக 2 டீஸ்பூன் அளவிற்கு மிளகாய் தூள் சேர்த்துக்கொள்ள வேண்டும். 1 டீஸ்பூன் தனியா தூளை சேர்க்க வேண்டும். அடுத்ததாக சேர்க்க வேண்டியது சீரக தூள் 1 டீஸ்பூன் அளவிற்கு சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் செய்யவும்.

new100% KFC சிக்கன் செய்யும் முறை தமிழில்..!

செய்முறை விளக்கம் 3:

இப்போது சிக்கன் பீஸை இந்த மசாலாவில் சேர்க்கவும். மசாலாவில் சிக்கனை சேர்த்த பிறகு நன்றாக கிளற வேண்டும். இப்போது சிக்கன் பீஸுடன் உப்பு 1 1/2 டீஸ்பூன், 3 டீஸ்பூன் மிளகு தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.

செய்முறை விளக்கம் 4:

அடுத்து கடாயில் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி சிக்கனை 20 நிமிடம் வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்த பிறகு சிக்கனில் சிறிதளவு கருவேப்பிலை சேர்க்கவும். அடுத்து ஒன்றரை டீஸ்பூன் அளவிற்கு மிளகுத்தூளை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அவ்ளோதாங்க இந்த சுவையான பெப்பர் சிக்கன் ரெடி. இந்த டிப்ஸை எல்லாரும் மறக்காம ட்ரை பண்ணி பாருங்க.

நன்றி வணக்கம்..!

newதந்தூரி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி..?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement