7 வகை காய்கறிகளை சேர்த்து பொங்கல் கூட்டு..!

Advertisement

காய்கறி கூட்டு செய்வது எப்படி.?

வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று பொங்கல் திருநாளிற்கு 21 வகை காய்கறி கூட்டு, 11 வகை காய்கறி கூட்டு, 9 வகை காய்கறி கூட்டு என்று செய்வார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் 7 வகை காய்கறிகளை சேர்த்து கூட்டு செய்வது எப்படி என்று படித்து தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

காய்கறி கூட்டு செய்ய தேவையான பொருட்கள்:

  1. அவரைக்காய் – 1/4 கப்
  2. கத்திரிக்காய் –1/4 கப்
  3. பீன்ஸ் –1/4 கப்
  4. சர்க்கரை வள்ளி கிழங்கு –1/4 கப்
  5. தக்காளி –1/4 கப்
  6. வெங்காயம் –1/4 கப்
  7. கறிவேப்பிலை- சிறிதளவு
  8. கேரட் – 1/4 கப்
  9. பச்சை பட்டாணி – தேவையான அளவு
  10. மொச்சக்கொட்டை -தேவையான அளவு
  11. மல்லி தூள் -தேவையான அளவு
  12. மிளகாய் தூள்-தேவையான அளவு
  13. மஞ்சள் தூள் -தேவையான அளவு
  14. தேங்காய் -தேவையான அளவு
  15. பெருஞ்சீரகம் –1 தேக்கரண்டி
  16. பூண்டு – சிறிதளவு
  17. இஞ்சி – சிறிதளவு
  18. உப்பு -தேவையான அளவு

காய்கறி கூட்டு செய்முறை:

பொங்கல் காய்கறி கூட்டு

முதலில் மேல் கூறப்பட்டுள்ள காய்கறிகளை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தப்பருப்பு, தக்காளி, வெங்காயம், கறிவேப்பிலை, நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும்.

அடுத்து பீன்ஸ், கேரட், சவ்சவ், சர்க்கரை வள்ளி கிழங்கு, கத்திரிக்காய், மொச்சக்கொட்டை, பச்சை பட்டாணி, அவரைக்காய் சேர்த்து வேகின்ற அளவிற்கு தண்ணீர் ஊற்றவும். அதில் மல்லிதூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விடவும்.

மிக்சி ஜாரில் தேங்காய், பெருஞ்சீரகம், பூண்டு, நறுக்கிய இஞ்சி சேர்த்து அரைக்கவும்.

அரைத்த பேஸ்ட்டை கடாயில் சேர்த்து கலந்து கொள்ளவும். காய்கறி வெந்து கொதித்த பிறகு கொத்தமல்லி தழை சேர்த்து இரக்கி விடவும்.

இதையும்செய்து பாருங்கள்  ⇒ பொங்கல் ஸ்பெஷல் 9 காய்கறிகள் சேர்த்து சாம்பார் இப்படி வையுங்க..! பொங்கல் காலியாகிடும்.!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement