இட்லி, தோசைக்கு சரியான சட்னின்னு அது இதாங்க..! சொல்லும் போதே ஆசையா இருக்கு வாங்க செஞ்சு சாப்பிட்டு பார்ப்போம்..!

Advertisement

இட்லி தோசைக்கு சட்னி

இட்லி தோசை என்பது அனைவருடைய வீட்டிலும் தினமும் செய்யக்கூடிய ஒரு சாப்பாடு. ஆனால் வீட்டில் இட்லி, தோசை செய்வதை விட அதற்கு சைடிஸ் செய்வது தான் மிகப்பெரிய வேலையாக இருக்கும். ஏனென்றால் தினமும் வீட்டில் ஒரே மாதிரியான சட்னியை செய்தால் ஒரு நாள் எதுவும் சொல்லாமல் சாப்பிடுவார்கள். ஆனால் மறுநாள் எப்படி ஒரே சட்னியை சாப்பிடுவது என்று திட்டுவார்கள். அதனால் தான் இட்லி, தோசைக்கு என்றே உள்ள ஒரு தாறுமாறான சுவையில் இருக்கின்றன ஒரு சட்டினியை இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்த சட்னியை தினமும் செய்தால் கூட சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். சரி வாங்க சீக்கிரம் சட்னி எப்படி செய்வது என்று தெரிந்துகொண்டே இன்றே வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து அசத்தலாம்.

Poondu Milagai Chutney:

 poondu milagai chutney for idli in tamil

இட்லி, தோசைக்கு தினமும் தாறுமாறான சுவையில் சாப்பிடக்கூடிய பூண்டு மிளகாய் சட்னி எப்படி செய்வது என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேவையான பொருட்கள்:

  • பூண்டு- 1/2 கப்
  • காய்ந்த மிளகாய்- 10
  • சின்ன வெங்காயம்- 10
  • கடுகு- 1/2 தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு- 1/2 தேக்கரண்டி
  • கருவேப்பிலை- சிறிதளவு 
  • உப்பு- தேவையான அளவு 
  • புளி- சிறிதளவு 
  • எண்ணெய்- தேவையான அளவு

இதையும் படியுங்கள்⇒ புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி இந்த மாதிரி செய்து பாருங்க

பூண்டு மிளகாய் சட்னி செய்முறை:

இட்லி தோசைக்கு சட்னி

கடாயில் எண்ணெய் சேர்த்தல்:

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து எண்ணெயை காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் எடுத்துவைத்துள்ள பூண்டினை சேர்த்து நன்றாக 10 நிமிடம் வதக்கி கொள்ளுங்கள்.

இப்போது காய்ந்த மிளகாய் சேர்த்தல்:

10 நிமிடம் கழித்த பிறகு அடுப்பில் உள்ள பூண்டுடன் காய்ந்த மிளகாய் 8 சேர்த்து மீண்டும் இதனை 5 நிமிடம் வதக்கி கொள்ளுங்கள்.

கடாயில் வெங்காயம் சேர்த்தல்:

5 நிமிடம் கழித்த பிறகு கடாயில் உள்ள பொருட்களுடன் எடுத்துவைத்துள்ள சின்ன வெங்காயம் மற்றும் புளியை சேர்த்து நன்றாக பொன் நிறம் போல் வதக்கிவுடன் அடுப்பை அணைத்து விட்டு கடாயை கீழே இறக்கி விடுங்கள்.

வதக்கிய பொருட்களை ஆற வைத்தல்:

இப்போது கடாயில் வதக்கி வைத்துள்ள பொருட்களை சிறிது நேரம் நன்றாக ஆற விடுங்கள்.

மிக்சி ஜாரில் பொருட்களை சேர்த்தல்:

அடுத்து ஒரு மிக்சி ஜாரில் ஆறவைத்துள்ள பொருட்களை சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பும் சேர்த்து சிறிதளவு மட்டும் தண்ணீர் சேர்த்து அரைத்து விடுங்கள்.

மீண்டும் கடாயில் எண்ணெய் சேர்த்தல்:

கடைசியாக கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் 1/2 தேக்கரண்டி கடுகு, 1/2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு மற்றும் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து இவை அனைத்தும் பொன் நிறமாக வந்தவுடன் அரைத்து வைத்துள்ள சட்னியை அதில் சேர்த்து 5 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள்.

5 நிமிடம் கழித்த பிறகு அந்த சட்னியை கீழே இறக்கி வீட்டில் உள்ளவர்களுக்கு இட்லி, தோசைக்கு சைடிஷாக வைய்யுங்கள்.

இதையும் படியுங்கள்⇒ இட்லி, தோசைக்கு என்று இருக்கின்றன சுவையான வெங்காய சட்னி செய்யலாம் வாங்க..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement