சப்பாத்தி மற்றும் இட்லிக்கு ஏற்ற வகையில் சூப்பரான பூண்டு தொக்கு..! கேள்வி பட்டிருக்கிறீர்களா..!

poondu thokku recipe in tamil

பூண்டு தொக்கு செய்வது எப்படி?

நண்பர்களே வணக்கம் இன்றைய சமையல் குறிப்பில் தினமும் சட்னி வகைகள் மற்றும் புதிய வகை ரெசிபி பதிவிட்டு பாத்திருப்பீர்கள். இன்று அதுபோல் உங்களுக்கு பிடித்தது போல் சுவையான இட்லி சப்பாத்திக்கு ஏற்ற வகையில் சூப்பரான சுவையான சைடிஸ் செய்து பார்க்க போகிறோம் பொதுவாக நிறைய வகையான சைடிஸ் சாப்பிட்டு இருப்போம் ஆனால் இதுபோல் செய்து சாப்பிட்டு இருந்திருக்க மாட்டோம், சரி வாங்க அந்த டெஸ்ட்டியான பூண்டு தொக்கு எப்படி செய்யலாம் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்..!

பூண்டு தொக்கு செய்ய தேவையான பொருட்கள்:

பூண்டு தொக்கு செய்ய தேவையான பொருட்கள்

 1. சமையல் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
 2. உளுத்தம் பருப்பு – கால் கப்
 3. தனியா விதைகள் – 2 டேபிள் ஸ்பூன்
 4. சீரகம் – ஒரு டீஸ்பூன்
 5. வெந்தயம் – கால் டீஸ்பூன்
 6. பூண்டு – 20 பற்கள்
 7. வரமிளகாய் – 12
 8. காஷ்மீரி மிளகாய் – 5
 9. புளி – எலுமிச்சை அளவு
 10. சமையல் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
 11. கடுகு – 1/2 டீஸ்பூன்
 12. உளுந்து – 1 டீஸ்பூன்
 13. பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்
 14. கருவேப்பிலை – 1 கொத்து
 15. பெரிய வெங்காயம் – 1 டேபிள் ஸ்பூன்
 16. உப்பு – தேவையான அளவு

பூண்டு தொக்கு செய்முறை விளக்கம்:

ஸ்டேப் -1

முதலில் ஒரு கைப்பிடி அளவுக்கு பூண்டுடை உரித்து வைத்துக்கொள்ளவும். மற்ற பொருட்களையெல்லாம் தொக்குக்கு தகுந்தது போல் தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப் -2

அடுப்பை பற்றவைத்து அதில் கடாயை வையுங்கள் அதன் பின் அதில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு காயவிடவும்.

ஸ்டேப் -3

எண்ணெய் காய்ந்ததும் அதில் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டேப் -4

உளுந்தைப்பருப்பு வறுபடும்போதே அதில் தனியா விதைகள் எடுத்துவைத்திருந்தோம் அல்லவா அதனையும் சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.

ஸ்டேப் -5

நன்றாக வதங்கியதும் அதில் சீரகம் மற்றும் வெந்தயத்தை சேர்த்து அதனையும் வதக்கி கொள்ளவும். அதன் பின் தனியாக முதலில் தோல் உரித்த பூண்டுகளை அதில் சேர்க்கவும்.

ஸ்டேப் -6

பூண்டு வதங்கியதும் அதில் காரத்திற்கு ஏற்ப வரமிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டேப் -7

பிறகு எலுமிச்சை அளவு புளி எடுத்துக்கொண்டு அதில் உள்ள விதைகள் மற்றும் நார்களை எடுத்துவிட்டு அதனையும் அதில் போட்டு வதக்க வேண்டும்.

சேர்த்த அனைத்தும் நன்றாக வதங்கியதும் அனைத்தையும் எடுத்து ஆறவைக்க வேண்டும்.

ஸ்டேப் -8

ஆறிய பின் மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அரைத்து வந்த தொக்குவுடன் அப்படி வைத்தால் அது சுவை தராது அதனால் சிறிய தாளிப்பு கொடுக்க வேண்டும்.

ஸ்டேப் -9

கடைசியாக ஒரு கடாயை வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் அளவுக்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். அதனுடன் உளுந்து சேர்த்துக்கொள்ளவும். பிறகு பெருங்காயத்தூள், ஒரு கொத்து கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.

ஸ்டேப் -10

கடைசியாக பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை கொஞ்சம் போல சேர்த்து பொன்னிறமாக நன்கு தாளிக்க வேண்டும். பின்பு அதில் நீங்கள் அரைத்து வைத்த பூண்டு சட்னியை இதில் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். நன்கு பச்சை வாடை போகும் வரை அடுப்பில் வைத்துக்கொள்ளவும். அவ்வளவு தாங்க சுவையான பூண்டு தொக்கு ரெடி..!

குழந்தைகளுக்கு இந்த மாதிரி பூண்டு சட்னி செய்து கொடுங்கள்

இந்த பூண்டு சட்னியை செஞ்சி பாருங்கள் ஒரு வாரம் ஆனாலும் ஊசிபோகாது

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்