Poondu Thokku Seivathu Eppadi
இன்றைய சமையல் குறிப்பு பதிவில் இட்லி தோசைக்கு ஏற்ற மிகவும் சுவையான பூண்டு தொக்கு செய்வது எப்படி என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த பூண்டு தொக்கை மட்டும் ஒரு முறை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுத்து பாருங்க. அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். 4 இட்லி சாப்பிடுபவர்கள் கூட 2 இட்லி அதிகமாக சாப்பிடுவார்கள். சரி வாங்க நண்பர்களே இந்த பூண்டு தொக்கு எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
பூண்டு தொக்கு செய்ய தேவையான பொருட்கள்:
- பூண்டு – 200 கிராம்
- புளி – எலுமிச்சைபழ அளவு
- வரமிளகாய் – 10
- வெந்தயம் – 1 ஸ்பூன்
- பெருங்காய தூள் – 1 ஸ்பூன்
- வெல்லம் – 1
- சீரகம் – 1 ஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
பூண்டு, புளி எடுத்து கொள்ளவும்:
முதலில் 200 கிராம் அளவிற்கு பூண்டு எடுத்து கொள்ளுங்கள். அதை மிக்சி ஜாரில் போட்டு சக்கையாக அரைத்து கொள்ள வேண்டும்.
பின் ஒரு எலுமிச்சை பழம் அளவிற்கு புளியை எடுத்து தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
அதேபோல வரமிளகாய் 10 எடுத்து அதை சூடான தண்ணீரில் 10 நிமிடம் வரை ஊறவைக்க வேண்டும்.
எத்தனையோ தொக்கு சாப்பிட்டு இருப்பீங்க ஆன இந்த மாதிரி தொக்கு சாப்பிட்டு இருக்கீங்களா..! |
அடுப்பில் கடாய் வைக்கவும்:
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் சூடானதும் அதில் 1 ஸ்பூன் அளவில் பெருங்காய தூள் சேர்த்து கொள்ள வேண்டும்.
பின் அதில் 1 ஸ்பூன் அளவில் வெந்தயம் சேர்த்து கொள்ள வேண்டும். வெந்தயத்தின் நிறம் மாறியதும் அதில் நாம் எடுத்து வைத்துள்ள பூண்டு சேர்த்து கொள்ள வேண்டும்.
பூண்டு நன்றாக நிறம் மாறி வரும் வரை 10 நிமிடத்திற்கு நன்றாக வதக்க வேண்டும். பின் அதில் சீரகம் 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ள வேண்டும்.
மிக்சி ஜாரில் சேர்க்கவும்:
பின் நாம் வதக்கியதை ஆறவிட்டு ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அதில் நாம் ஊறவைத்த புளி, மிளகாய் மற்றும் உப்பு, வெல்லம் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
தாளிக்க வேண்டும்:
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு கொள்ள வேண்டும். கடுகு பொரிந்து வந்ததும் அதில் கருவேப்பிலை சேர்த்து கொள்ளவும்.
அடுத்து அதில் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை இதில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
அவ்வளவு தான் நண்பர்களே..! மிகவும் சுவையான பூண்டு தொக்கு ரெடி..! இதை நீங்கள் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுங்கள். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதையும் படியுங்கள்⇒ கத்திரிக்காய் தொக்கு செய்வது எப்படி
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |