Potato Egg Recipes in Tamil
பள்ளிவிட்டு வீட்டுக்கு திரும்பி வரும் குழந்தைகளுக்கு ஏதாவது புதுமையான மற்றும் அருமையான சுவையுடன் ஸ்னாக்ஸ் செய்து தரவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் நாம் செய்து தரும் ஸ்னாக்ஸ் அவர்களுக்கு பிடித்ததாகவும் இருக்க வேண்டும். அவர்களின் உடலுக்கு எந்தவித கெடுதலும் ஏற்படுத்த அளவிற்கும் இருக்க வேண்டும் போன்ற குழப்பங்களும் உங்களின் மனதில் இருக்கும்.
அப்படி உங்களின் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் வகையிலும் குறிப்பாக அவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்காத வகையிலும் உள்ள ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபியை பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
Boiled Potatoes and Eggs Recipe in Tamil:
முதலில் இந்த ஸ்னாக்ஸ் ரெசிபிக்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- உருளைக்கிழங்கு – 4
- முட்டை – 5
- வெங்காயம் – 2
- பச்சைமிளகாய் – 4
- கேரட் – 2
- குடைமிளகாய் – 1
- கொத்தமல்லியிலை – 1 கைப்பிடி அளவு
- மிளகாய்தூள் – 2 டீஸ்பூன்
- கரம்மசாலா – 2 டீஸ்பூன்
- மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்
- மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
இதையும் படியுங்கள்=> வாழைக்காய், உருளைக்கிழங்கு மட்டும் இருந்தால் போதும் மழைக்காலத்திற்கு ஏற்ற சூடான மற்றும் ருசியான ஸ்நாக்ஸ் ரெடி ..!
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் நாம் எடுத்துவைத்துள்ள 4 உருளைக்கிழங்கு மற்றும் 5 முட்டை ஆகியவற்றை தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் நன்கு வேகவைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
பின்னர் அவற்றின் தோல்களை உரித்து நன்கு மசித்து கொள்ளுங்கள். பிறகு அதனுடன் 1 டீஸ்பூன் மஞ்சள்தூள், 2 டீஸ்பூன் மிளகாய்தூள், 2 டீஸ்பூன் கரம்மசாலா, 2 டீஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 3
அதனுடன் நாம் எடுத்துவைத்துள்ள 2 வெங்காயம், 4 பச்சைமிளகாய், 2 கேரட், 1 குடைமிளகாய் மற்றும் 1 கைப்பிடி அளவு கொத்தமல்லியிலை ஆகியவற்றையும் நன்கு பொடி பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு பிசைந்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்=>வீட்டில் உருளைக்கிழங்கு இருக்கா..? அப்போ இந்த மாதிரி ரெசிபி செஞ்சி சாப்பிட்டு பாருங்க..!
ஸ்டேப் – 4
பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் நாம் பிசைந்து வைத்துள்ள கலவையை எடுத்து சிறிய சிறிய உருண்டையாகவோ அல்லது வடைபோலவோ போட்டு பொறித்து எடுத்து அனைவருக்கும் பரிமாறுங்கள்.
அப்படி உங்களுக்கு எண்ணெயில் போட்டு பொறித்து சாப்பிட வேண்டாம் என்றால் அந்த கலவையை வடை போல தட்டி தோசைக்கல்லில் போட்டு சிறிதளவு எண்ணெயை ஊற்றி முன்னும் பின்னும் பிரட்டி போட்டு வேகவைத்து கூட அனைவருக்கும் பரிமாறலாம்.
இந்த ஸ்னாக்ஸ் ரெசிபியை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சுவைத்துப்பாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |