கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு தேங்காய் இல்லாமல் இந்த மாதிரி சட்னி செய்து கொடுங்கள்

Advertisement

பொட்டுக்கடலை சட்னி வைப்பது எப்படி.?

இன்றைய பதிவில் தேங்காய் இல்லாமல் பொட்டுக்கடலை சட்னி செய்வது எப்படி? என்று தெரிந்துகொள்ள போகிறோம். கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தேங்காய் சேர்த்த உணவுகளை சாப்பிட மாட்டார்கள். அதோடு தேங்காய் சட்னி பிடிக்காதவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த மாதிரி சட்னி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த சட்னியை இட்டலி, தோசை, கிச்சடி, உப்புமா போன்ற உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம். வாங்க இந்த சுவையான சட்னி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வோம் வாங்க..

இதையும் படியுங்கள் ⇒ சுவையான பீர்க்கங்காய் சட்னி.! இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அப்புறம் விடவே மாட்டீர்கள்.

சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

  • சமையல் எண்ணெய் – 2 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் – 6
  • பெரிய வெங்காயம் – 2
  • பொட்டுக்கடலை – 100 கிராம்
  • கடுகு – 1 தேக்கரண்டி
  • உளுந்து – 1 தேக்கரண்டி
  • வரமிளகாய் – 1
  • கருவேப்பிலை – சிறிதளவு
  • பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு

பொட்டுக்கடலை சட்னி செய்முறை:

பொட்டுக்கடலை சட்னி செய்முறை

ஸ்டேப்:1

முதலில் வெங்காயத்தை தோல் நீக்கி நறுக்கி கொள்ள வேண்டும். பின் பச்சை மிளகாயையும் நறுக்கி கொள்ளவும்.

ஸ்டேப்:2

அடுப்பை பற்றவைத்து கொள்ளவும். அதில் கடாயை வைக்க வேண்டும். 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றுங்கள்.  எண்ணெய் காய்ந்ததும் நறுக்கி வைத்த பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். மிளகாயின் நிறம் மாறும் வரை வதக்கி கொள்ளவும்.

ஸ்டேப்:3

பின் நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.

ஸ்டேப்:4

வதக்கிய பொருட்கள் ஆறியதும் மிக்சி ஜாரில் சேர்த்து, அதனுடன் 100 பொட்டுக்கடலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.

ஸ்டேப்:5

பின் கடாயை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்தவுடன் உளுத்தப்பருப்பு சேர்த்து வதக்கவும். பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.

ஸ்டேப்:6

பின் கறிவேப்பிலை சிறிதளவு, பெருங்காய தூள், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் தாளித்ததை அரைத்த சட்னியில் சேருங்கள். அவ்ளோ தாங்க சுவையான வெங்காய பொட்டுக்கடலை சட்னி தயார்..!

ஸ்டேப்:7

இட்லி, தோசைக்கு மட்டுமில்லாமல் வடை, பஜ்ஜி போன்ற ஸ்னாக்ஸ்க்கும் தொட்டு சாப்பிடலாம் சுவையாக இருக்கும். உங்கள் வீட்டில் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க நண்பர்களே..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்

 

Advertisement