புடலங்காய் புட்டு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்…!

pudalangai puttu seivathu eppadi

புடலங்காய் புட்டு செய்வது எப்படி.?

வணக்கம் நண்பர்களே..! நீங்கள் நிறைய வகையான புட்டு வகைகள் சாப்பிட்டு இருப்பீர்கள். கோதுமை புட்டு, அரிசி மாவு புட்டு, கேழ்வரகு புட்டு, ரவை புட்டு, பச்சை அரிசி புட்டு, சுறா புட்டு இதுபோன்ற நிறைய வகையான புட்டு வகைகள் சாப்பிட்டு அலுத்துபோகிருக்கும். ஆனால் புடலங்காய் புட்டு சாப்பிட்டு இருக்க மாட்டீர்கள். அவர்களுக்கு இந்த பதிவானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சமையலுக்கு மட்டும் பயன்படும் இந்த புடலங்காய் புட்டு செய்வது எப்படி என்று தெரிந்துக்கொண்டு நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாரக்கலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ மீன் புட்டு…! குழந்தைகள் சுலபமாக மீன் சாப்பிட இதை செய்துகொடுங்கள்..!

புடலங்காய் புட்டு செய்ய தேவையான பொருட்கள்:

  • புடலங்காய்- 250 கிராம் 
  • நல்லெண்ணைய்- 1 ஸ்பூன் 
  • பூண்டு பல்– 5
  • வெங்காயம்- 2
  • மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்
  • மிளகாய் தூள்- 1/2 தூள் 
  • சோம்பு- 1 ஸ்பூன் 
  • பச்சை மிளகாய்- 2
  • இஞ்சி- சிறிதளவு 
  • உப்பு- சிறிதளவு
  • கருவேப்பிலை- சிறிதளவு

புடலங்காய் புட்டு செய்முறை விளக்கம்:

ஸ்டேப்- 1

முதலில் நீங்கள் எடுத்து வைத்துள்ள 250 கிராம் புடலங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அடுப்பில் வைத்து வேகவைத்து விடுங்கள். அதன் பிறகு எடுத்துவைத்துள்ள பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், இவை அனைத்தையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தனியாக வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 2

அடுத்ததாக அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து நல்லெண்ணைய் ஊற்றி அதில் சோம்பு மற்றும் நறுக்கி வைத்துள்ள பொருட்களையும் சேர்த்து நன்றாக வதக்கி விடுங்கள். அதன் பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை நன்றாக வதக்க வேண்டும்.

ஸ்டேப்- 3

அதன் பிறகு மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன், சிறிதளவு உப்பு மற்றும் நறுக்கிய இஞ்சி, கருவேப்பில்லை சேர்த்து மறுமுறை வதக்கி கொள்ளுங்கள். ஒரு 5 நிமிடம் களித்து வேக வைத்து எடுத்துவைத்துள்ள புடலங்காயை மற்றும் அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒரு முறை கிண்டி விடுங்கள்.

ஸ்டேப்- 4

கடைசியாக புடலங்காயை ஒரு கிண்டு கிண்டி முடித்த பிறகு வேறு ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நல்லெண்ணைய் மற்றும் சோம்பு சேர்த்து தாளித்து விடுங்கள். அவ்வளவு தான் நீங்கள் எதிர்பார்த்த சுவையான புடலங்காய் புட்டு தயார்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்