புதினா பொடி செய்வது எப்படி..? | Pudina Karam Podi Recipe in Tamil
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இன்று சமையல் குறிப்பில் புதினா கார பொடி செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக வீட்டில் பிரியாணி செய்ய போகிறார்கள் என்றால் வீட்டில் எங்கு சென்றாலும் மனம் வருவது புதினா நறுமணம் தான். புதினா என்று சொன்னால் அனைவருக்கும் ஞாபகம் வருவது சட்னி தான் ஆனால் அதனை எப்படி தினமும் சாப்பிட முடியுமா? ஒரே வகையான உணவுகளையே சாப்பிட முடியாத பொழுது எப்படி சட்னியை மட்டும் சாப்பிட முடியும். அதனால் வீட்டில் அதிகமாக புதினா இருந்தால் இந்த மாதிரியான பொடி வகைகளை செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
புதுமையான முறையில் பொடி வகைகளை பற்றி தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தினமும் பதிவிட்டு வருகிறது அதனை படித்து சமையலை வித்தியாசமாக செய்து சாப்பிடுங்கள். வாங்க இப்போது புதினா பொடி எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
இட்லி பொடிய இப்படி செஞ்சி பாருங்க..! ரெண்டு இட்லி கூட சாப்பிடுவீங்க..! |
தேவையான பொருட்கள்:
- உளுத்தப்பருப்பு – 1/2 கப்
- காய்ந்த மிளகாய் – 25
- கருவேப்பிலை – 2 கொத்து
- உப்பு – தேவையான அளவு
- பெருங்காயம் – சிறிதளவு
- நல்லெண்ணெய் – சிறிதளவு
- புதினா – 5 கொத்து.
ஸ்டேப் – 1
- முதலில் எடுத்து வைத்த உளுத்தபருப்பை கடாயில் எண்ணெய் ஊற்றாமல் வறுக்கவும்.
ஸ்டேப் – 2
- உளுத்தப்பருப்பு வருக்கும் போதே அதில் காய்ந்த மிளகாய் 25 எடுத்து அதில் சேர்த்து. இரண்டையும் நன்றாக வறுக்க வேண்டும்.
ஆந்திரா ஸ்டைல் பூண்டு மிளகாய் பொடி இப்படி செஞ்சிப்பாருங்க..! |
ஸ்டேப் – 3
- அந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து வறுத்த பிறகு அதில் 2 கொத்து கருவேப்பிலை சேர்த்து வறுத்தெடுத்துக்கொள்ளவும்.
ஸ்டேப் -4
- தேவையான அளவு உப்பு எடுத்து காடையில் போட்டு அதனையும் வறுத்துக்கொள்ளவும். அப்போது தான் புதினா கெடாமல் அதிக நாள் வரை வைத்து பயன்படுத்த முடியும்.
ஸ்டேப் -5
- பின்பு சிறிதளவு பெருங்காயம் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும். வறுத்த நான்கு பொருட்களையும் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஸ்டேப் -6
- பிறகு மற்றொரு கடாயில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் நறுக்கி வைத்த புதினாவை போட்டு வறுத்துக்கொள்ளவும். வதக்கும் போது அதன் பச்சை தன்மை போகும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
ஸ்டேப் -7
- இப்போது தாயார் செய்து வைத்துள்ள பொருட்களை அரைக்க ஆரம்பிப்போம். முதலில் நாம் வறுத்து எடுத்து வைத்த உளுத்தம்பருப்பு, மிளகாய், உப்பு, பெருங்காயம், கருவேப்பிலை இந்த பொருட்களை சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்கவும்.
ஸ்டேப் -8
- கடைசியாக தனியாக நல்லெண்ணெய் வறுத்து எடுத்த வைத்த புதினாவை மிக்சியில் சேர்த்து அரைக்கவும்.
- இப்போது சுவையான புதினா பொடி தயார் அதில் கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்த்து இட்லிக்கு சாப்பிடலாம்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |