உருளைக்கிழங்கு இது வேற மாதிரி டேஸ்டா இருக்கே..!

punch potato fry in tamil

Punch Potato Fry in Tamil

நாம் வீட்டில் வாங்கும் காய்கறிகளில் முதல் பங்கினை வகிப்பது உருளை கிழங்கு தான். இந்த உருளைக்கிழங்கு இல்லாமல் நம் வீட்டில் எந்த ஒரு சமையலும் நடக்காது. ஏனென்றால் இந்த ஒரு காய் இருந்தால் தான் குழந்தைகள் ஓரளவு சாப்பிடுவார்கள்.

ஆகவே உருளை கிழங்கு இல்லாமல் எந்த ஒரு உணவும் சாப்பிடவும் மாட்டார்கள்  செய்யவும் மாட்டார்கள். அதேபோல் எப்போதும் ஒரே மாதிரி உருளைக்கிழங்கு பொரியல் வறுவல் என்று செய்து சாப்பிடவும் செய்யவும் பிடிக்காது. இன்று உருளைக்கிழங்கை வைத்து வித்தியாசமான உருளைக்கிழங்கு டிஸ் செய்வது எப்படி..? என்று பார்க்கலாம் வாங்க.!

Punch Potato Fry in Tamil:

தேவையான பொருட்கள்:

  1. பேபி உருளைக்கிங்கு – 1/2 கிலோ
  2. பட்டர் – சிறிதளவு
  3. சீஸ் – சிறிதளவு
  4. மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
  5. சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்,
  6. மிளகுதூள் – 1/2 ஸ்பூன்,
  7. மிளகாய் இடித்த தூள் – 1 டீஸ்பூன்,
  8. சாட் மசாலா – 1/2 ஸ்பூன்,
  9. தேவையான அளவு உப்பு

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

செய்முறை:

முதலில் நாம் பேபி உருளைக்கிழங்கை வாங்கிக் கொள்ளவும். முதலில் உருளைக்கிழங்கில் தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து வேகவைக்கவும். குலைந்துவிடாமல் வெளியில் எடுத்துவிடவும்.

அடுத்து அதனை அப்படியே ஒரு கடாயில் வைத்து ஓரளவு நசுக்கிக் கொள்ளவும், அதுவும் தோல் உரிக்காமல்.

அடுத்து ஒரு கடாயில் பட்டர் சேர்த்து வதக்கிவிட்டு அதன் பின் நாம் நசுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்க்கவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி இந்த மாதிரி செய்து பாருங்க

அடுத்து ஒரு சின்ன கிண்ணத்தை எடுத்துக்கொள்ளவும். அதில் 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், சீரக தூள், மிளகுதூள் 1/2 ஸ்பூன், மிளகாய் இடித்த தூள் 1 டீஸ்பூன், சாட் மசாலா 1/2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து உருளைக்கிழங்கு இருக்கும் பாத்திரத்தில் மேல் தூவி விடவும். இப்போது நன்கு கலந்துவிட்டு மேல் சீஸ் துருவி அப்படியே எடுத்து சாப்பிடலாம்.

செய்து பாருங்கள் 👉👉👉  உருளைக்கிழங்கு வறுவலை ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>  சமையல் குறிப்புகள்