Punjabi Poori Recipe in Tamil
உங்கள் வீட்டில் இதுவரை யாரும் செய்யாத இந்த பூரியை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். பூரியை எப்போதும் ஒரே மாதிரி செய்து சாப்பிட கொஞ்சம் அலுப்பாக இருந்தாலும், அது தெகட்டாமல் இருக்க வேண்டும்..! அதனால் உங்களுக்கு தெகட்டாமல் இருக்க இந்த பூரியை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்..! இந்த பூரியானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுவதற்கு சத்துக்கள் நிறைந்த உணவாக உள்ளது. சரி வாங்க அதனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Punjabi Poori Recipe in Tamil:
♦ 3 டேபிள் ஸ்பூன் ரவை சேர்த்து ஊறவைக்கவும்.
♦ முதலில் ஒரு பவுலை எடுத்துக்கொள்ளவும். அதில் 3 கப் கோதுமை மாவு எடுத்துக் கொள்ளவும். அதில் 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் மிளகாய் தூள், 1 ஸ்பூன் தனியா தூள், கொஞ்சமாக பெருங்காய தூள், 1 டீஸ்பூன் சீரகம், 1 டீஸ்பூன் கடலை மாவு, 1 டீஸ்பூன் ஓமம் சேர்த்து கொள்ளவும். ஊறவைத்த ரவை சேர்த்து பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெந்தய கீரை, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து, அதன் பின்பு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
♦ பிசைந்த பிறகு குட்டி குட்டியாக உருண்டை உருட்டி கொள்ளவும். உருண்டையாக உருட்டும் போது கெட்டியாக உருட்டிக்கொள்ளவும். ஏனென்றால் அதில் கீரை சேர்ப்பதால் மாவு மிருதுவாக தொடங்கும். பிறகு அது பூரிக்கு தேய்க்கும் போது மாவு சரியாக வராது.
♦ பின்பு ஒவ்வொன்றாக பூரி செய்து எண்ணெயில் போட்டு பொறித்து எடுங்கள். உங்கள் வீட்டில் பூரி அனைத்தும் காலியாகிவிடும்.
தேவையான பொருட்கள் உங்கள் வீட்டில் இருக்கும் நபர்களை பொறுத்து அளவுகள் மாறுபடும். ஆகவே பொருட்களை மட்டும் கீழே பார்க்கலாம்..
- கோதுமை மாவு
- மஞ்சள் தூள்
- மிளகாய் தூள்
- தனியா தூள்
- வெந்தய கீரை
- ஓமம்
- ரவை
- பெருங்காய தூள்
- கடலை மாவு
- சீரகம்
- உப்பு
- எண்ணெய்
பூரிக் கிழங்கு மசாலா செய்வது எப்படி
5 நிமிடத்தில் செய்ய கூடிய ஹோட்டல் ஸ்டைல் பூரி மசாலா ரெசிபி
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |