Rajma Pulao Recipe in Tamil
வணக்கம் நண்பர்களே. இன்றைய பொதுநலம் சமையல் பதிவில் அனைவருக்கும் பிடித்த ராஜ்மா புலாவ் எப்படி செய்வது என்பதைத்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். பொதுவாக புலாவ் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். பல வகையான புலாவ் ரெசிபிகள் உள்ளன. அதில் ஒன்றான ராஜ்மா புலாவ் செய்முறை விளக்கத்தை இப்பதிவில் பதிவிட்டுள்ளோம். சிகப்பு காராமணியை தான் ராஜ்மா என்று சொல்வார்கள்.
ராஜ்மாவில் மெக்னீசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுமட்டுமில்லாமல், இதில், நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது செரிமானத்திற்கும் மலசிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது. இதனை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. எனவே ராஜ்மா புலாவ் சுவையாக செய்வது என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Rajma Pulao in Tamil:
Rajma Pulao Recipe Ingredients in Tamil:
- ராஜ்மா- 200 கிராம்
- பாஸ்மதி அரிசி- 1 கப்
- நெய்- 3 தேக்கரண்டி
- பட்டை- சிறிய துண்டு
- கிராம்பு- 4
- அன்னாசி பூ- 2
- பிரியாணி இலை- 1
- ஏலக்காய்- 2
- ஜாதிபத்திரி- 2
- பெரிய வெங்காயம்- 2
- பச்சை மிளகாய்- 3
- இஞ்சி பூண்டு விழுது- 1 ஸ்பூன்
- தக்காளி- 2
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
- மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்
- மிளகாய் தூள்- 2 டீஸ்பூன்
- கரம் மசாலா தூள்- 1/2 டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
ராஜ்மா கிரேவி செய்வது எப்படி |
How to Make Rajma Pulao in Tamil:
ஸ்டேப் -1
முதலில் ராஜ்மா பீன்ஸை நன்றாக கழுவி விட்டு 8 மணிநேரம் ஊறவைத்து எடுத்து கொள்ளுங்கள். பிறகு இதனை குக்கரில் சேர்த்து 5 அல்லது 6 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -2
இப்போது, குக்கரில் நெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரியாணி இலை மற்றும் ஜாதிபத்திரி சேர்த்து பொரிய விடுங்கள்.
ஸ்டேப் -3
பிறகு, இதில் மெலிதாக நறுக்கிய வெங்காயம் மற்றும் நீட்ட வாக்கில் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப் -4
வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு, அதில் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
சுவையான பன்னீர் புலாவ் செய்வது எப்படி??? |
ஸ்டேப் -5
அதன் பின், இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.
ஸ்டேப் -6
இப்போது, இதில் வேகவைத்த ராஜ்மா பீன்ஸை சேர்த்து 2 நிமிடம் நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு கரம் மசாலா தூள், எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -7
நன்றாக கலந்த பிறகு, ராஜ்மா பீன்ஸ் வேகவைத்த தண்ணீர் 1 கப் மற்றும் 3/4 கப் சாதாரண தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -8
இப்போது பாஸ்மதி அரிசியை கழுவி 15 நிமிடம் ஊறவைத்து இதனுடன் சேர்த்து கலந்து விடுங்கள். அடுப்பை குறைவான தீயில் வைத்து குக்கர் 2 விசில் வரும்வரை வேகவிடுங்கள்.
ஸ்டேப் -9
பிறகு, அடுப்பை ஆஃப் செய்து 10 நிமிடம் கழித்து எடுத்தால் சுவையான ராஜ்மா புலாவ் ரெடி..!
புதினா புலாவ் செய்முறை..! உங்கள் குழந்தைகளை சுண்டி இழுக்கும்..! |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |