புதினா புலாவ் செய்முறை..! உங்கள் குழந்தைகளை சுண்டி இழுக்கும்..!

mint pulao

புதினா சாதம் செய்முறை (pudina rice in tamil)..!

புதினா புலாவ் செய்முறை / புதினா சாதம் செய்யும் முறை: – சாதாரணமா பெண்கள் காலைல வேலைக்கு கிளம்புற அவசரத்தில் மதிய உணவை எளிமையாகவும், மிகவும் ருசியாகவும் செய்ய வேண்டும் என்று எண்ணம் தோன்றும்.

அந்த வகையில் மிகவும் சுவையான மற்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய புதினா புலாவ் செய்முறை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க…

ருசியான கேரட் குடைமிளகாய் சாதம் செய்யலாம் வாங்க ..!

புதினா சாதம் செய்யும் முறை / புதினா புலாவ் செய்முறை (pudina rice in tamil) தேவையான பொருட்கள்:

 • பாசுமதி அரிசி – 1 கப்
 • வெங்காயம் – 1 (நறுக்கியது)
 • உருளைக்கிழங்கு – 1 (நறுக்கியது)
 • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 டீஸ்பூன்
 • கிராம்பு – 2
 • ஏலக்காய் – 1
 • பட்டை – 1/2
 • நெய் – 1 டேபிள் ஸ்பூன்
 • உப்பு – தேவையான அளவு

புதினா புலாவ் செய்முறை / புதினா சாதம் செய்யும் முறை – அரைப்பதற்கு:

 • புதினா – 1 கட்டு
 • துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
 • தக்காளி – 1/2
 • பச்சை மிளகாய் – 1

இங்கு புதினா புலாவ் ரெசிபியை (pudina rice in tamil) மிகவும் ஈஸியாக எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து முயற்சித்துப் பாருங்கள்.

புதினா சாதம் செய்யும் முறை / புதினா புலாவ் செய்முறை (pudina rice in tamil):

புதினா புலாவ் செய்வது எப்படி ஸ்டேப் :1

புதினா சாதம் செய்யும் முறை: இந்த புதினா புலாவ் செய்வதற்கு முதலில் அரிசியை தண்ணீரில் ஒரு 20 நிமிடங்கள் நன்றாக ஊறவைத்து, பின்பு சுத்தமாக கழுவி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

புதினா புலாவ் செய்வது எப்படி ஸ்டேப் :2

பின்பு மிக்ஸியில் புதினா, தேங்காய் துருவல், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு பேஸ்ட்டு போல் நன்றாக அரைத்து கொள்ளவும்.

புதினா புலாவ் செய்வது எப்படி ஸ்டேப் :3

பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், ஏலக்காய், கிராம்பு, பட்டை சேர்த்து தாளித்து, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, அடுத்து வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

புதினா புலாவ் செய்வது எப்படி ஸ்டேப் :4

பிறகு அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, பின் உருளைக்கிழங்கு, உப்பு மற்றும் அரிசியை சேர்த்து 2-3 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.

புதினா புலாவ் செய்வது எப்படி ஸ்டேப் :5

இறுதியில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 8-10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், புதினா புலாவ் ரெடி!!!

தந்தூரி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி
இதுபோன்ற சுவை சுவையான சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்