வீட்டில் ரவா இருக்க அப்போ இந்த ஸ்வீட் செய்து அசத்துங்கள் | Rava Sweet in Tamil

Rava Sweet in Tamil

ரவை வைத்து ஸ்வீட் செய்வது எப்படி?

ஹாய் நண்பர்களே வணக்கம் இன்று நாம் ரவா ஸ்வீட் செய்வது எப்படி என்று பார்க்க போகிறோம். அனைத்து அம்மாவுக்கும் உள்ள யோசனைதான் தினமும் புது புது டிஷ் செய்து அசத்த வேண்டும் என்பது ஆனால் அப்படி தினமும் அதே செய்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு விளைவிக்கும். தினமும் ஈஸியா ஒரு டிஷ் செய்யவேண்டும் என்றால் அனைவருக்கும் நியாபகம் வருவது மைதா தான் அதில் தான் புது புது டிஷ் செய்து அசத்துவீர்கள். மைதா அதிகம் உணவுகளில் சேர்த்துக்கொள்ள கூடாது என்பதை மருத்துவர்கள் அடிக்கடி பரிந்துரை செய்வார்கள். அப்படி மைதா சேர்க்கக்கூடாது என்றால் ரவா சேர்த்து கொள்வீர்கள் அதில் கேசரி செய்வீர்கள் அல்லது குலோப்ஜாம் செய்து சாப்பிடுவீர்கள் அதனை செய்வதற்கு அதிகம் நேரம் எடுக்கும் இனி வீட்டில் ரவை இருந்தால் இந்த ஸ்வீட் செய்து சாப்பிடுங்கள். என்னதான் இந்த டிஷ் பெயர் என்று இந்த பதிவை படிக்கும் அனைவருக்கும் தோன்றும் அதனை தெரிந்துகொள்ள முழுமையாக படித்து வீட்டில் செய்து அசத்துங்கள்.

ரவா கேக் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

  1. நெய்
  2. அரைக்கப் ரவை
  3. முக்கால் கப் பால்
  4.  சர்க்கரை – 200 கிராம்
  5. ஏலக்காய் தூள் – 1/2 ஸ்பூன்
  6. பால் பவுடர் 2 ஸ்பூன்
  7. காய்ச்சிய பால்
  8. பேக்கிங் சோடா பவுடர் 1 ஸ்பூன்

செய்முறை:

ஸ்டேப் -1 

ரவை வைத்து ஸ்வீட் செய்வது எப்படி

  • முதலில் அடுப்பை பற்றவைத்து அதில் வாணலியில் இரண்டு ஸ்பூன் விட்டு அதில் எடுத்துவைத்த இரண்டு கப் ரவையை சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ளவும்.

ஸ்டேப் -2

Rava Sweet in Tamil

  • ரவை நன்கு வறுத்த பிறகு ரவை எடுத்த பாத்திரத்தில் உள்ள அளவில் அரை கப்  காய்ச்சிய பால் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். கலந்த பிறகு கெட்டியாக மாறும் வரை ரவையை கிளறிவிடுங்கள் பின் தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டேப் -3

ரவை வைத்து ஸ்வீட் செய்வது எப்படி

  • எடுத்துவைத்த மாவு சூடு குறையும் வரை அந்த ஸ்வீட்க்கு தேவையான சர்க்கரை பாவு காய்ச்சிக்கொள்ளவும். அதற்கு முக்கால் கப் சர்க்கரை எடுத்து போட்டு அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

ஸ்டேப் -4

ரவை வைத்து ஸ்வீட் செய்வது எப்படி

  • சீனிபாகு கொதித்த பிறகு அதில் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்துகொள்ளவும். தனியாக சர்க்கரை பாவை எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டேப் – 5

Rava Sweet in Tamil

  • ஆறவைத்த மாவை எடுத்து சப்பாத்தி மாவு போல் நன்கு பிசைந்துகொள்ளவும். பிறகு பிசைந்த மாவில் இரண்டு ஸ்பூன் பால் பவுடர் சேர்த்து அதனுடன் காய்ச்சி ஆறவைத்த பால் 2 ஸ்பூன் சேர்த்து அதனுடன் பேக்கிங் சோடா பவுடர் சேர்த்து அனைத்தையும் நன்கு கலந்து பிசைந்துகொள்ளவும்.

ஸ்டேப் -6

Rava Sweet in Tamil

  • பிசைந்த மாவில் சின்ன சின்ன உருண்டையாக பிடித்துக்கொள்ளவும்.

ஸ்டேப் -7

Rava Sweet in Tamil

  • இன்னொரு கடையில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து சூடான பிறகு அதில் உருட்டி வைத்த மாவை அதில் போட்டு பொன்னிறமாக மாறிய பின் அதனை எடுத்து எடுத்துவைத்த சர்க்கரை பாவில் போடவும்.

ஸ்டேப் -8

Rava Sweet in Tamil

  • சர்க்கரை பாவில் போட்டு 10 நிமிடம் ஊறவைத்த பிறகு அதில் உங்களுக்கு பிடித்த நட்ஸ் வகைகள் சேர்த்து சாப்பிடால் அதன் சுவை சரியாக இருக்கும். இதனுடைய பெயர் RASBORA ஆகும். வீட்டில் செய்து அசத்துங்கள்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal