ரவையில் சுவையான ஈவினிங் ஸ்நாக்ஸ் இப்படி செய்து பாருங்கள்..!

Advertisement

ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்வது எப்படி.?

மாலை நேரம் என்றாலே அனைவருக்கும் டீயுடன் சேர்த்து எதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் போல இருக்கும். அப்படி நீங்கள் மாலை நேரங்களில் வடை, போண்டா, பஜ்ஜி, கேசரி மற்றும் பக்கோடா இது போன்ற பல வகையான ஸ்னாக்ஸ் வகைகள் சாப்பிட்டு இருப்பீர்கள். சில நேரத்தில் ஒரே வகையான ஸ்னாக்ஸ் சாப்பிட்டு அலுத்து போய்விடும் என்று கடையிலும் வாங்கி சாப்பிட்டு இருப்பீர்கள். அதனால் உங்களுக்கு இன்றைய பதிவில் சுவையான ஈவினிங் ஸ்னாக்ஸ் புது முறையில் செய்வது எப்படி என்று பார்க்கப்போகிறோம். சரி வாங்க அந்த ஸ்னாக்ஸ் என்னவென்று தெரிந்துக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்⇒ வீட்டிலேயே தயிர் வடை செய்வது எப்படி?

Rava Snacks Recipes in Tamil:

rava bonda seivathu eppadi tamil

இன்றைய பதிவில் வீட்டில் இருக்கும் ரவையை வைத்து சுவையான போண்டா செய்வது எப்படி என்று பார்க்கப்போகிறோம்.

ரவை போண்டா செய்ய தேவையான பொருட்கள்:

  1. ரவை- 1 கப்
  2. சீரகம்- 1 ஸ்பூன் 
  3. பச்சை மிளகாய்- 1
  4. இஞ்சி- சிறிய துண்டு 
  5. பெரிய வெங்காயம்- 1
  6. தயிர்- 1 கப் 
  7. கறிவேப்பிலை- சிறிதளவு 
  8. கொத்தமல்லி- சிறிதளவு
  9. உப்பு- சிறிதளவு 
  10. எண்ணெய்- தேவையான அளவு

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ரவை போண்டா செய்வது எப்படி.?

ரவை போண்டா செய்வது எப்படி

ஸ்டேப்- 1

முதலில் நீங்கள் எடுத்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி ஆகிய மூன்றையும் சுத்தமான தண்ணீரில் அலசி நறுக்கி வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

அடுத்தத்தாக எடுத்துவைத்துள்ள 1 கப் ரவையை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து ஒரு பாத்திரத்தில் தனியாக வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 3

இப்போது அரைத்து வைத்துள்ள ரவையுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் சீரகம், சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக 5 நிமிடம் பிசைந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 4

5 நிமிடம் கழித்த பிறகு பிசைந்து வைத்துள்ள மாவுடன் 1 கப் தயிர் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மாவை நன்றாக பிசைந்து 20 நிமிடம் அப்படியே மூடி போட்டு வைத்து விடுங்கள். இப்போது ரவை போண்டா மாவு ரெடி. 

ஸ்டேப்- 5

20 நிமிடம் கழித்து அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் தயார் செய்து வைத்துள்ள ரவை போண்டா மாவினை சிறு சிறு உருண்டையாக எடுத்து போண்டா போல் உருட்டி எண்ணெயில் போட்டு வேக விடுங்கள்.

ஸ்டேப்- 6

போண்டா பொன் நிறமாக வெந்து வந்தவுடன் எண்ணெயில் இருந்து போண்டாவை எடுத்து விடுங்கள். இதே போல மீதம் உள்ள மாவிலும் போண்டா செய்து விடுங்கள்.

அவ்வளவு தான் சுவையான ரவை போண்டா தயாராகிவிட்டது. இந்த போண்டாவிற்கு சைடிஷாக தேங்காய் சட்னி தொட்டு சாப்பிடுங்கள். ஒரு முறை இது போலவே செய்து கொடுங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த ஸ்னாக்ஸை விரும்பி சாப்பிடுவார்கள்.

இதையும் செய்து பாருங்கள் 👉👉 வெங்காயம் வைத்து மிகவும் சுவையான வடை இப்படி செஞ்சி பாருங்க..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement